china successful trial on high speed train | சீனாவில் 2,300 கி.மீ., பாதையில் அதிவேக ரயில் சேவை துவக்கம் | Dinamalar

சீனாவில் 2,300 கி.மீ., பாதையில் அதிவேக ரயில் சேவை துவக்கம்

Added : டிச 24, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பீஜிங்: சீனாவில், தலைநகர் பீஜிங்கிலிருந்து, குவாங்சோ என்ற நகருக்கு இடையேயான, 2,300 கி.மீ., தூரத்துக்கு, அதிவேக ரயில் சேவை துவக்கப்பட்டு உள்ளது.அதிவேக ரயில் சேவையில், உலக அளவில், சீனா முன்னோடியாக உள்ளது.சீனாவின் பல நகரங்களுக்கு, "புல்லட் ரயில்' எனப்படும், அதிவேக ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு, தலைநகர், பீஜிங்கிலிருந்து, ஷாங்காய் நகருக்கு, மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய "புல்லட் ரயில்' சேவை துவக்கப்பட்டது. இதன் மூலம், 1,300 கி.மீ., தூரத்தை, இந்த ரயில், 4:50 மணி நேரத்தில் சென்றடைகிறது.பீஜிங்குக்கும், ஹாங்காங் அருகே உள்ள குவாங்சோ நகருக்கும் இடையே, நாளை மறுநாள், அதிவேக ரயில், தினமும் இயக்கப்படுகிறது. 2,300 கி.மீ., தூரத்தை, இந்த ரயில் 7:60 மணி நேரத்தில் கடக்கும். இதற்கான சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்டன.விமான கட்டணத்தை விட, இந்த ரயில் கட்டணம் அதிகமாக இருந்தாலும், நாளை மறுநாள், இந்த ரயிலில் பயணிப்பதற்கு, இப்போதே, 2,000 பேர், முன்பதிவு செய்து விட்டனர்.சீனாவில், புல்லட் ரயிலில் அடிபட்டு, கடந்த ஆண்டு, 40 பேர் பலியாகி உள்ளனர்.பீஜிங் - குவாங்சோ இடையேயான, "புல்லட் ரயில்,' நேற்று முன்தினம், செங்சோ நகரம் வரை, அதாவது, 693 கி.மீ., தூரம் பயணிகளுடன் சோதனை ரீதியாக இயக்கப்பட்டது.பீஜிங் - குவாங்சோ இடையே, சாதாரண எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க, 20 மணி நேரம் ஆகும். தற்போது, இந்த புல்லட் ரயிலில், 7:60 மணி நேரத்தில் பீஜிங்கிலிருந்து, குவாங்சோவை சென்றடைய முடிகிறது.* * *

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthikumar - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
25-டிச-201201:03:35 IST Report Abuse
Karthikumar China is great
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை