நாக்பூர்: தாய், தந்தை, ஜாதி, மதம் தெரியாதவர்களுக்கு, ராணுவத்தில் இது வரை இடமளிக்காத நிலையில், அத்தகையவர்களையும், ராணுவத்தில் சேர்த்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோல, பச்சை குத்தும் விஷயத்திலும், விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.ஒரு மாதத்திற்கு முன் வரை, இந்திய ராணுவத்தில், தாய், தந்தை பெயர் தெரியாதவர்கள், ஜாதி, மதம் தெரியாதவர்களுக்கு, பணி வழங்கப்படுவது கிடையாது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.ராணுவ தலைமையகத்திலிருந்து, ராணுவ வீரர் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில், "தாய், தந்தை, ஜாதி, மதம் தெரியாதவர்களையும், ராணுவத்தில் சேர்த்து கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.ராணுவத்தில் சேர, பிறந்த தேதி அவசியம் என்பதால், தாய், தந்தை பெயர் தெரியாத, பிறந்த தேதியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு, மறுக்கப்பட்ட பணியிடங்கள், இப்போது வழங்கப்படுகின்றன.அத்தகைய சூழ்நிலையில், அந்த குழந்தைகள் வளர்ந்த, அனாதை இல்லங்களின் நிர்வாகிகள் தெரிவிக்கும் தேதியை, அவர்களின் பிறந்த தேதியாக கருதலாம் என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தகையோர், ராணுவத்தின் படை பிரிவுகளான, மராத்தா, மெட்ராஸ், கூர்க்கா போன்ற, தனிப்பட்ட படை பிரிவுகளில் சேர்க்கப்படுவதற்கு பதிலாக, "அனைத்திந்தியா - அனைத்து ஜாதி' பிரிவில் சேர்க்கப்படுவர்.குறிப்பிட்ட ஜாதி பெயரிலான படை பிரிவுகளில், பிற சமுதாயத்தினர் சேர்க்கப்படும் நிலையில், அந்த படை பிரிவுகளிலும், ஜாதி, மதம் தெரியாதவர்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது."ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட, ஜாதி அடிப்படையிலான படை பிரிவுகளை மாற்ற வேண்டும்' என்ற குரல், சமீப காலமாக, பாதுகாப்பு துறை வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதன் தாக்கத்தால் தான், அனாதையாக்கப்பட்டவர்களுக்கும் ராணுவத்தில் இடம் கிடைத்துள்ளது என, ராணுவ உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.அதுபோல, உடலில், "பச்சை' குத்தி கொள்பவர்களை, ராணுவத்தில், சேர்ப்பது கிடையாது; இப்போது, அந்த கெடுபிடியும் தளர்த்தப்பட்டுள்ளது.மத அடையாள சின்னங்கள், சொந்த பெயர், நெருங்கிய உறவினர்களின் பெயர் போன்றவற்றை, உடலில் பச்சை குத்தியிருந்தால், அத்தகையவர்களை, ராணுவ பணிக்கு எடுத்து கொள்ளலாம் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மிகவும் நல்ல செய்தி. இது இந்திய எங்குமே வரணும். குறிப்பாக பெயர் தெரியாத அனாதை இளம் மக்கள் ஆண்கள் கட்டாயம் ரானுவத்துலே சேர்ந்தால் நல்லது. பல ஏழைகள் குண்டாச்கலாக மாறுவது கொள்ளையர்களாக மாறுவதும் குறையும் நாடும் ஒரு நல்ல முன்னேற்றம் பெரும், சீன சிங்கப்பூர் போல இந்தியாலயும் ஆர்மி கல்வி கட்டாயம் ஆக்கினால் நிச்சயம் மாணவர்கள் எதிர்காலம் நல்லாவே இருக்கும் ஒழுங்கும் சுய கட்டுப்பாடும் உள்ள நேர்மையான சமூகம் உண்டாகும் .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.