நகரி: திருப்பதி, திருமலையில், வைகுண்ட ஏகாதசியன்று, சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி, வி.ஐ.பி.,க்கள் தரிசனம் செய்வதற்காக வழங்கப்பட்ட, 1,000 ரூபாய் டிக்கெட்டுகள், 5,000 ரூபாய்க்கு, மற்ற பக்தர்களுக்கு விற்கபட்டதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் எல்லாம், நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில், திருப்பதியில், நேற்று முன் தினம் அதிகாலையே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி, வெங்கடேச பெருமாளை வி.ஐ.பி.,க்கள் தரிசனத்திற்காக, 1,000 ரூபாய் டிக்கெட்டுகள் தேவஸ்தானம் சார்பில், விற்கப்பட்டன.வி.ஐ.பி., அந்தஸ்து இல்லாத பக்தர்களுக்கும், இந்த, 1,000 ரூபாய் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதால், அந்த டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்ட பலர், வி.ஐ.பி., தரிசனம் செய்ய விரும்பும் இதர பக்தர்களுக்கு, 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளனர்.வி.ஐ.பி.,க்களுக்கு, 3,000 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என, முதலில் அறிவித்த தேவஸ்தான அதிகாரிகள், 6,000 டிக்கெட்டுகள் வரை விநியோகம் செய்துள்ளனர். அதனால், அதிக எண்ணிக்கையில், டிக்கெட் பெற்றவர்கள், கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்த்துள்ளனர்.ஒரு வி.ஐ.பி.,க்கு, ஆறு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால், பலருக்கு, 20 டிக்கெட்டுகள் வரை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.