பாலாசூர்: விமானங்களில் பொருத்தி, எதிரி நாட்டு விமானத்தையும், ஏவுகணையையும், நேருக்கு நேராக தாக்கி அழிக்கும், "அஸ்திரா' ஏவுகணை, நேற்று வெற்றிகரமாக, தன் மூன்றாவது கட்ட சோதனையை நிறைவு செய்தது.நான்கு மீட்டர் நீளம், 160 கிலோ எடை கொண்ட, "அஸ்திரா' ஏவுகணையை, ராணுவ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். போர் விமானங்களில் பொருத்தி, வானிலிருந்து வானில், மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணை, பல கட்ட சோதனைகளில் ஈடுபடுத்தப்படுகிறது.கடந்த 21ம் தேதி, எலக்ட்ரானிக் இலக்கையும், மறுநாள், ஆளில்லா விமானத்தையும் வெற்றிகரமாக தாக்கிய நிலையில், நேற்று நடந்த மூன்றாவது கட்ட சோதனையில், ஆளில்லா விமானத்திற்கு பதிலாக, போலியான ஒரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.மூன்றாவது கட்ட சோதனையும் வெற்றி பெற்றது என, விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.இதற்காக, ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள, ஏவுதளத்தில் இருந்து, நேற்று மதியம், 12:20 மணிக்கு, "அஸ்திரா' ஏவப்பட்டது. விமானங்களில் பொருத்தப்படும், "அஸ்திரா' ஏவுகணையை, நேற்று தரையில் இருந்து, விண்ணிற்கு ஏவி, நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.