Tamil Nadu Chief Minister J Jayalalithaa appeals to farmers not to take 'extreme step' | விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்: விவசாயிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்: விவசாயிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்

Updated : டிச 25, 2012 | Added : டிச 24, 2012 | கருத்துகள் (91)
Advertisement
 விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்: விவசாயிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்

சென்னை:"சம்பா பயிர் சாகுபடியில் இழப்பு ஏற்பட்டால், உரிய நிவாரணம் வழங்கி, விவசாயிகளை அரசு பாதுகாக்கும். எனவே, விவசாயிகள் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:சுப்ரீம் கோர்ட், காவிரி நதிநீர் ஆணையம், காவிரி கண்காணிப்புக் குழு ஆகியவற்றின், பல்வேறு உத்தரவுகளின் படி, இந்தாண்டு, செப்டம்பர் 12ம் தேதி முதல், டிசம்பர் 31ம் தேதி வரை, பில்லிகுண்டுவில், தமிழகத்திற்கு, 56.816 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்க வேண்டும்.ஆனால், இன்று வரை, மேட்டூர் நீர்த் தேக்கத்தில், 47 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது. தமிழகத்திற்கு, குறைந்த பட்சம், 18 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று, இம்மாதம், 20ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில், மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடர்பாடு காலங்களில், கர்நாடகத்தில் இருந்து, கிடைக்கும் தண்ணீர், வடகிழக்கு பருவமழை, புதிய விவசாய உத்திகள் மூலம், சம்பா சாகுபடியை மேற்கொள்ள, செப்டம்பர், 17ம் தேதி, மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

மேலும், பயிரிடப்பட்டுள்ள சம்பாவை காப்பாற்ற, 69.88 கோடி ரூபாயில் கூடுதல் சிறப்பு தொகுப்புத் திட்டம் ஒன்றும், அறிவிக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு, 8.582 டி.எம்.சி.,யாக குறைந்ததால், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், காவிரி டெல்டா விவசாயிகள், சம்பா பயிரை காப்பாற்ற முடியுமா என்ற கவலையில் உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில், அடுத்தமாதம், 4ம்தேதி, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதற்கான உத்தரவை வழங்கும் என, நம்புகிறேன்.

தற்போது, வழங்கப்பட்டு வரும் மும்முனை மின்சாரம், சம்பா சாகுபடி காலம் முடியும் வரை கிடைக்கும். பயிரிழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு, 13 ஆயிரத்து 692 ரூபாய் வரை வழங்கப்படும். இந்த சூழலில், விவசாயிகள் எவரும், எவ்வித கவலை, அச்சம் கொள்ள வேண்டாம்; விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்.இயற்கை பொய்த்தாலும், கர்நாடகம் வஞ்சித்தாலும், மத்திய அரசு அலட்சியமாக இருந்தாலும், சம்பா பயிர் இழப்பு ஏற்பட்டால், உரிய நிவாரணம் வழங்கி, விவசாயிகளை இந்த அரசு பாதுகாக்கும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Erode kingcobra - erode,இந்தியா
25-டிச-201218:18:18 IST Report Abuse
Erode kingcobra நதிகளை தேசியமாக்கினால் பாதி பிரச்சினை முடிந்த மாதிரி .நிவாரணம் கொடுபபோதடு நிறுத்தாமல் எல்லா கட்சியும் நதிகளை தேசிய மயமாக்க போராடவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ
25-டிச-201217:17:43 IST Report Abuse
Kankatharan  நேற்றய செய்தியில் கருணாநிதி விவசாயிகள் "தற்கொலை" செய்துகொள்ளவேண்டாம் என்று பச்சையாக வக்கிரத்தனமாக பசப்பியது கண்டு வெறுப்பாக இருந்தது. மத்திய கூட்டாளி சோனியாவுக்கு எடுத்துச்சொல்லி அவசர அடிப்படையில் குறிப்பிட்ட அளவு தண்ணீரை திறந்து விட்டிருக்க முடியும் ஏன் எனில் கர்நாடகத்தை ஆட்சி செய்வது காங்கிரஸ். காங்கிரஸின் முதலாளிகளான சோஒனியா அல்லது மன்மோகன் எவராவது கட்டளையிடும் பட்சத்தில் கர்நாடக அரசை பணிய வைத்திருக்க முடியும். ஆனால் குடும்ப விவகாரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கட்டுமரம் மக்களுக்கு ஒருபோதும் செய்யப்போவதில்லை. இன்று முதவர் ஜெயலலிதாவின் அறிவிப்பு ஓரளவு மன திருப்தியை அனைவருக்கும் அளித்திருக்கும் என நினைக்கிறேன் ஜெயலலிதா அவர்களின் கொள்கையில் உடன்பாடு இல்லாதவன் நான் என்றாலும் இந்த அறிவித்தல் மற்றும் "விபரீத" முடிவுக்கு வரவேண்டாம் என நயனமாக நாகரீகமாக குறிப்பிட்டிருப்பது திருப்தியளிக்கிறது.
Rate this:
Share this comment
Amal Anandan - chennai,இந்தியா
26-டிச-201207:40:22 IST Report Abuse
Amal Anandanஅண்ணே, நியூயார்க் ல இருந்தா இப்படியா, அம்மாவுக்கு சொம்படிங்க. ஆனா, காங்கிரஸ் ஆட்சிதான் கர்நாடகாவில் என சொல்ல வேண்டாம். பிஜேபி ஆட்சி செய்கிறது அங்கே. அம்மா அறிக்கை விட்டால் பரிவு. ஆனால் மஞ்ச துண்டு அறிக்கை விட்டால் பசப்பு. எங்கே இருந்தப்பா இந்த மாதிரி பேச கத்துகிட்டு வரிங்க. நாடு நல்லா உருப்படும்...
Rate this:
Share this comment
Mohi - Chennai,இந்தியா
28-டிச-201211:56:13 IST Report Abuse
Mohiஇது இரு மாநில பிரச்சினை. காவிரி ஆணை கூட்டுக்குழு உள்ளது. ஆரம்ப காலத்திலிருந்து அம்மையார் எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்து விட்டு இப்போ கருணாநிதியை ஷுட்டிக்கடுவதில் அர்த்தம் இல்லை. கர்நாடகாவில் யார் ஆட்சி நடக்கிறது என்று தெரியவில்லை அப்படி இரக்க உமது அறிக்கையும் இப்படித்தானே இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
kamarud - ooty,இந்தியா
25-டிச-201216:04:20 IST Report Abuse
kamarud நீங்கள் விபரீதமான நிகழ்வுகள் [காவிரி நீர் கிடைக்காதது] நடக்காமல் பார்த்து கொண்டால் விவசாயி கள் ஏன் விபரீதமான முடிவுகளை தேடி போகிறார்கள் ???
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
25-டிச-201215:20:45 IST Report Abuse
Rangarajan Pg அந்த காலத்தில் தொலைகாட்சியில் வயலும் வாழ்வும் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்ப படும். ஏதாவது மிகவும் போர் அடிக்கும் சுப்ஜெக்ட் பற்றி யாராவது பேசினால் ""வயலும் வாழ்வும் பார்ப்பது போல இருக்கிறது"" என்று கிண்டலடிப்பார்கள். அந்த அளவுக்கு தான் வயல்களையும் அது சார்ந்த தொழில்களையும் தெரிந்து வைத்திருந்தார்கள். விவசாய தொழில் செய்பவர்கள் தான் இந்த நாட்டு மக்களுக்கு படியளப்பவர்கள் என்பதை அறிய மறந்தார்கள். விவசாயம் என்பது போர் அடிக்கும் விஷயமல்ல நமக்கு படியளக்கும் விஷயம் என்பதை இனியாவது உணர வேண்டும். விவசாயிகள் படும் பாட்டை வைத்து, அவர்கள் பிணத்தின் மீது உட்கார்ந்து அரசியல் பிழைப்பை நடத்தும் கருணாவை போன்ற ஆட்களை புறந்தள்ள வேண்டும். அதே சமயம் அரசாங்கமும் எவ்வளவு தான் ஈடு கொடுக்கும்?
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
25-டிச-201215:04:08 IST Report Abuse
Rangarajan Pg நகரங்களில் தொழில் புரிவோர் ஒன்று கூடி விவாதிக்க, பரஸ்பரம் பேசி கொள்ள, வியாபாரத்தை முன்னேற்ற என்று சில FORUM இருக்கிறது. CLUBS இருக்கிறது. இதனால் சில அசௌகரியங்கள் இருந்தாலும் பெரும்பாலும் தொழிலதிபர்களுக்கு நல்ல பல தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்து அவர்கள் வியாபாரத்தை அதிகரிக்க வழி செய்கிறது. இதை போல விவசாயிகளுக்கும் சில FORUMS ஏற்படுத்தலாம். பல கிராமங்களில் உள்ள விவசாயிகள் அவர்களுக்குள்ளேயே ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி கொண்டு அவர்களுக்குள்ளே விவசாயம் சாகுபடி போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம். சில பல விவசாய டிப்ஸ் கள் பரிமாறி கொள்ளலாம். தங்களது லாப நஷ்டங்களை பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம். இதனால் ஒரு இடத்தில தேக்கம் இருந்தால் பற்றாக்குறை உள்ள இடத்தில அதை நிரப்பலாம். ஆக மொத்தம் ஏதாவது ஒரு வகையில் விவசாயிகளுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தும் விஷயம் இது. இதை போல முயற்சிக்கலாமே. இதனால் விவசாயிகளின் EDUCATION LEVEL அதிகரிக்கும். விவசாயம் தொடர்பான விஷயங்கள் பரவலாகும். எல்லோருக்கும் எல்லாமும் தெரிய வரும். பல விஷயங்களில் இது நன்மையே ஏற்படுத்தும். மன உளைச்சலில் இருக்கும் விவசாயி அல்லது தற்கொலை எண்ணத்தில் இருக்கும் ஒரு விவசாயி மனமாற்றம் அடையலாம். ஆக இதை போல FORUMS அரசே தொடங்கி விவசாயிகளை அதில் சேர ஊக்குவிக்கலாம். இவ்வாறு செய்வது விவசாயிகளின் மற்றும் விவசாய தொழிலின் எதிர்காலத்துக்கு நல்லது. ஏதோ எனக்கு தோன்றியது எழுதினேன். .
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
25-டிச-201213:12:35 IST Report Abuse
Rangarajan Pg தயவு செய்து இனியாவது இயற்கையை அழிக்கும் மாசுபடுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்களை இந்த அரசாங்கம் இரும்பு கரம் கொண்டு தண்டிக்க வேண்டும். இயற்கையை அழித்து அதனால் மழை பொய்த்து விட்டது. மழை பொய்த்து விட்டதால் விவசாயம் படுத்து விட்டது. அதனால் விவசாய நிலங்கள் சும்மா PRODUCTIVITY இல்லாமல் கிடக்கிறது. இதை பார்க்கும் ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்களுக்கு கண்களில் பேராசை மின்னுகிறது. அந்த நிலத்தை பணம் கொடுத்தோ அல்லது ஏமாற்றியோ விலைக்கு வாங்கி விளைநிலங்களை பிளாட் போட்டு வீடு கட்டுபவர்களுக்கு விற்று விடுகிறார்கள். இதை போல இயற்கையை மேலும் மேலும் மாசுபடுத்தி துன்புறுத்தினால் வரும்காலங்களில் நிலைமை இன்னமும் மோசமாக தான் போகும். மழை வருவது அறவே நின்று போகும். நிலத்தடி நீர் வறண்டு போகும். உணவுக்கும் குடிநீருக்கும் வழி இல்லாமல் அடுத்த மாநிலதிலிருந்தோ அல்லது அடுத்த நாட்டிலிருந்தோ உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு ஆளாவோம். மழை பெய்தால் எல்லாவற்றையும் சரி செய்து விடும். அந்த வல்லமை இயற்க்கைக்கு மட்டுமே உண்டு. அந்த மழையை பெற இயற்கையை போற்றுவோம். அதை மாசுபடுத்தும் எந்த செயல்களையும் செய்யாதிருப்போம். எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். வீட்டிற்க்கு ஒரு மரம் நடுவோம். மற்ற மாநிலங்களை சார்ந்திராமல் நம்மை நாமே சார்ந்திருப்போம். நன்மையே நடக்கும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட இந்த சோகம் நம் எல்லோருக்கும் ஏற்பட்டது போல தான். இந்த கஷ்ட காலத்தை விவசாயிகள் எப்படியாவது கடந்து விட இறைவனை பிரார்த்திப்போம்.
Rate this:
Share this comment
Cancel
Parvez - Trichirappalli,இந்தியா
25-டிச-201212:24:23 IST Report Abuse
Parvez கருணாநிதிக்கு எப்பவுமே பதவியில் இருக்க வேண்டும் என்கிற மிகப்பெரிய வெறி. பதவி சுகம் மஞ்சள் துண்டை வாட்டி வதைக்கிறது.
Rate this:
Share this comment
Kalignardaas - Thiruvannamalai,இந்தியா
25-டிச-201214:32:54 IST Report Abuse
Kalignardaasகலைஞர் கருணாநிதியை பற்றி தாறு மாறாக பேசாதீர்கள் பர்வேஸ் அய்யா கலைஞர் அய்யாவை வாட்டி வதைக்கும் ஒரே விஷயம் தமிழக மக்கள் படும் துன்பம். அதற்க்கு தீர்வு காண வேண்டும் அதை செயல் படுத்த வேண்டும் என்கிற மிகபெரிய வெறி மட்டும் தான் அவரிடத்தில் இருக்கிறது. ...
Rate this:
Share this comment
Cancel
Parvez - Trichirappalli,இந்தியா
25-டிச-201212:19:25 IST Report Abuse
Parvez மழை பொய்த்து விட்டது, கர்நாடகம் வஞ்சித்து விட்டது. விவசாயத்தை காப்பாற்ற முதல்வர் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று. பாராட்டியே ஆக வேண்டும்.
Rate this:
Share this comment
wellfrog.2012 - chennai,இந்தியா
25-டிச-201213:11:46 IST Report Abuse
wellfrog.2012 we will not build any dam in cauvery in tamil nadu after british . we will allow the water tio go to the sea when we get water in cauvery . we always blame the neighbouring state and we will not make any canals for irrigation in tamil nadu cauvery water . we wil go only by special plane and special helicopter . we will make tn farmers as beggars. we sp crores and croes for adv, useless schemes . WE HAVE TAKEN SINCERE EFFORT TO CHANGE TAMIL NADU NAME AS ERUL NADU we will not go for generators or any urgent remedy for electricity but WE WILL SATY CONMFORTABLY IN CHENNAI WIHOUT ANY POWER CUT AND ENJOY IN KORANADU ...
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
25-டிச-201211:43:44 IST Report Abuse
g.s,rajan செல் போன் மற்றும் கார் மின்னணு பொருட்கள் தயாரிப்பதில் காட்டும் ஆர்வத்தை அக்கறையை ,சாதனையை விவசாயத்தில் மத்திய மாநில அரசாங்கங்கள் காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம் .விவசாயத்தில் அக்கறை செலுத்தி அதிக அளவில் உற்பத்தி செய்து விட்டால் உலக நாடுகள் அனைத்தும் நம் நாட்டின் பின்னால் நிற்கும் ,இல்லையேல் விவசாய நாடான இந்தியா ஒவ்வொரு வேளைக்குமே வெளிநாட்டினரை நம்பிக்காத்து இருக்க வேண்டும் .இது சரியா ? ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
25-டிச-201211:32:49 IST Report Abuse
Sundeli Siththar வீட்டிற்கு வந்த மத்திய அமைச்சரிடம் கவர்னரை பற்றி குறை கூற தெரிந்த கருணாவிற்கு, கர்நாடக அரசின் வஞ்சனையை பற்றி கூறி தண்ணீர் திறந்து விட சொல்லத் தெரியவில்லையே.. அதுவும், அவரை தேர்ந்தெடுத்த தொகுதி மக்கள் படும் அவஸ்தையை பற்றி கூட கூற தெரியவில்லையே.. இந்த லட்சணத்தில் இவர் 5 முறை முதல்வராக இருந்தேன்.. 60 ஆண்டு கால அரசியல் அனுபவம் என்றெல்லாம் சொல்லுவது அசிங்கம்...
Rate this:
Share this comment
Raju Nellai - coimbatore,இந்தியா
25-டிச-201215:35:33 IST Report Abuse
Raju Nellaiநாராயணன்....அறுபது அல்ல எழுபது வருடம் அவரின் கூற்று படி.... அவரை பற்றி மிகையாக சொன்னாலே மனுசனுக்கு திருப்தி வராத போது நீங்கள் குறைத்து சொன்னால் அவர் ராஜ ராஜ சோழன் காலத்தில் இருந்து ஆரம்பித்து பிலாக்கணம் பாடுவார்..நன்றி ...
Rate this:
Share this comment
Amal Anandan - chennai,இந்தியா
26-டிச-201207:43:44 IST Report Abuse
Amal Anandanஏன் இப்படி அம்மாவிற்கு வரிந்து கட்டி ஜால்ரா என்பது புரியவிலல்லை. இந்த ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்து விட்டார் அம்மையார். எல்லாம் மஞ்ச துண்டு செய்யனும்னா எதுக்கு இந்த அம்மையார் நாற்காலியில்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை