மும்பை:லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதி, அபு ஜுண்டாலின் குரல், மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தானில் இருந்து உத்தரவு பிறப்பித்த பயங்கரவாதிகளின் குரலுடன் பொருந்தியிருப்பதாக, தடய அறிவியல் சோதனையில் தெரியவந்து உள்ளது.மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவன், அபு ஜுண்டால். பாகிஸ்தான் சென்று, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தான். 2008ம் ஆண்டு, மும்பையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தானில் இருந்து உத்தரவுகளை பிறப்பித்த பயங்கரவாதிகளில் இவனும் ஒருவன்.ஜூலை மாதம், சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, இந்தியா கொண்டு வரப்பட்ட அபு ஜுண்டால், மகாராஷ்டிரா போலீசார் வசம் உள்ளான். மும்பையை தாக்கிய பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தானில் இருந்து உத்தரவு பிறப்பித்த பயங்கரவாதிகளில் இவனும் ஒருவன் என்பது, விசாரணை அதிகாரிகளின் கருத்து.அதை உறுதிபடுத்துவதற்காக, ஜுண்டாலின் குரலும், பாகிஸ்தானில் இருந்து உத்தரவுகளை பிறப்பித்த பயங்கரவாதிகளின் குரலும், மும்பை, தடய அறிவியல் மையத்தில் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. சோதனை அறிக்கை, மும்பை போலீஸ் வசம், சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதில், பாகிஸ்தானில் இருந்து வந்த குரல்களில் ஒன்று, ஜுண்டாலின் குரல் என்பது, உறுதி செய்யப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.