லக்னோ :"உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி அமைச்சரவையில், இடம் பெற்றுள்ள, 48 அமைச்சர்களில், 26 பேர், குற்ற பின்னணி உடையவர்கள். இவர்களில், நான்கு பேர் மீது, கற்பழிப்பு, கொலை, கடத்தல் போன்ற வழக்குகள் உள்ளன' என, ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பான, ஏ.டி.ஆரின், நிறுவனர், திரிலோச்சன் சாஸ்திரி, தேசிய தேர்தல் கண்காணிப்பகமான, என்.இ.டபிள்யூ.,வின், உ.பி., மாநில ஒருங்கிணைப்பாளர், சஞ்சய் சிங் ஆகியோர், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. உ.பி.,யில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது, "மாநிலத்தில், சட்டம்-ஒழுங்கை, மேம்படுத்துவதே, எங்களின் முதல் குறிக்கோள்'என்ற கோஷத்தை, அகிலேஷ் யாதவ், முன் வைத்தார்.ஆனால், தற்போது, அவரது அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளவர்களில், 54 சதவீதம் பேர், குற்றப் பின்னணி உடையவர்கள் என, தெரியவந்துள்ளது. சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள், வேட்பு மனு தாக்கல் செய்தபோது, தங்களின் சொத்து விவரம், தங்கள் மீதுள்ள வழக்குகள் ஆகியவை குறித்தும், அதில் தெரிவித்துள்ளனர்.
இதை ஆய்வு செய்தபோது, குற்றப் பின்னணி உடையவர்களை பற்றிய விவரம் தெரியவந்தது. உ.பி.,யில், மொத்தம், 48 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில், 26 பேர் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கற்பழிப்பு, கொலை, கொலை முயற்சி, கடத்தல் ஆகிய வழக்குகள் உள்ள, ஐந்து அமைச்சர்களும், இதில் அடக்கம்.ஜவுளித் துறை இணை அமைச்சர், மெகபூப் அலிக்கு எதிராக, கொலை முயற்சி, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட, 15 வழக்குகள் உள்ளன. உணவுத் துறை அமைச்சர், ரகுராஜ் பிரதாப் சிங் என்ற ராஜா பையாவுக்கு எதிராக, எட்டு வழக்குகள் உள்ளன.கிராமப்புற மேம்பாட்டு இணை அமைச்சர், அரவிந்த் சிங் கோப்புக்கு எதிராக, மூன்று வழக்குகள் உள்ளன. முத்திரைத் தாள் துறை இணை அமைச்சர், மனோஜ் குமார் சிங் பராசிற்கு எதிராக, கற்பழிப்பு வழக்கு உள்ளது.
இந்த, 48 அமைச்சர்களில், 38 பேர், கோடீஸ்வரர்கள் என்ற விவரமும், அவர்கள் தாக்கல் செய்துள்ள, சொத்து பட்டியல் மூலமாக தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக, விவசாய அமைச்சர், குவார் ஆனந்த் சிங்கிற்கு, 18 கோடி ரூபாய் சொத்து உள்ளது.போக்குவரத்து அமைச்சர் ராஜா மகேந்திரா அரித்மான் சிங்கிற்கு, 15 கோடி ரூபாய் சொத்து உள்ளது. முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு, ஐந்து கோடி ரூபாய் தான் சொத்து உள்ளதாம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது/ அவர்கள் பொது வாழ்வில் ஒழுக்கத்தை எதிர் பார்கிறார்கள். அனால் இந்தியாவில் பொது வாழ்வில் ஒழுக்கமின்மை "அது தான் முக்கியமான தகுதியாக கருதுகின்றனர் மக்கள். மக்கள் இவர்களை ஒதுக்கட்டும் பின்னர் பாருங்கள் ................................. நடப்பதை.
ஒரு புறம் நாட்டில் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள்,மந்திரிகளில் பெரும்பாலோனோர் மிகவும் வசதி படைத்தோராக இருக்கிறார்கள்...கையில் கோடி கோடியாக பணமும், ஆடம்பர வாழ்வு உள்ளவர்கள் மட்டுமே தங்களின் சொத்தை பாதுகாக்கவும் மேலும் அதிக சொத்துக்களை தவறான முறையில் அடையவும் அரசியலில் இறங்குகிறார்கள்.. மக்கள் சேவை என்பது அறவே இல்லாமல் போய் விட்டது இன்றைய இந்திய அரசியலில்...மிகவும் வேதனைக்குரிய விஷயம்... மற்றொரு பக்கம், அடியாட்கள்,, குண்டர்கள், கொள்ளையர்கள், கொலை குற்றவாளிகள் இவர்கள் தங்களை சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இவ்வாறு ஏதேனும் ஒரு பதவியை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்கிரார்கள்... இவர்களை அறவே ஒழிப்பதென்பது இயலாத காரணமாகி விட்டது இன்றைய அரசியல்... இவர்களின் பின்புலம் இன்றி எந்த ஒரு கட்சியும் இந்தியாவில் இல்லை என்பது ஜனநாயகத்தின் அபலம்.. பாரத தாயின் சாபமாகி விட்டது... இதிலிருந்து மீண்டால் மட்டுமே நாடு நல் வழியில் செல்லும்... படித்தோர்கள், அனுபவ வாதிகள் பலர் இந்நாட்டில் இருந்தும் திருடர்கள் கையிலும், குற்றவாளிகளின் கையிலும் இன்று நாடு அகப்பட்டுக்கொண்டு சிக்கி சின்னாபின்னாமகிக்கொண்டிருக்கிறது... என்று தணியும் இந்த சுத்திர தாகம்?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.