நித்தாரி கொலை வழக்கு: கோலிக்கு தூக்கு தண்டனை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

காசியாபாத் :ஐந்து வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கில், குற்றவாளியான சுரேந்தர் கோலிக்கு, தூக்கு தண்டனை விதித்து, சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பளித்தது.

உ.பி., மாநிலம் நொய்டா நித்தாரி பகுதியில், 2005ம் ஆண்டு, மொகிந்தர் சிங் என்பவர் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த, தன் ஐந்து வயது மகளை காணவில்லை என, சிறுமியின் தந்தை, போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து, போலீசார், மொகிந்தர் சிங்கையும், அவரது வீட்டில் வேலை செய்த சுரேந்தர் கோலியையும், 2006 டிசம்பர், 29ம் தேதி கைது செய்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, மொகிந்தர் சிங் வீட்டு அருகே இருந்த கழிவு நீர் அகற்றும் தொட்டியில் இருந்து, எலும்புக் கூடுகளை கைப்பற்றினர். போலீசார் நடத்திய விசாரணையில், கோலி தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான்.

இதே போல், பல சிறுமிகளை கொலை செய்துள்ளதோடு, கொலையானவர்களின் எலும்புகளை சுவைத்து சாப்பிட்டதாகக் குறிப்பிட்டான்.சுரேந்தர் கோலி மீது, 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 16 வழக்குகளில் சி.பி.ஐ., விசாரணை நடத்தி, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. மூன்று வழக்குகள், போதிய சாட்சிகள் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், ஐந்து வயது சிறுமி கொலை வழக்கில், சி.பி.ஐ., கோர்ட்டில் நேற்று விசாரணை நடந்தது. நீதிபதி, எஸ்.லால், சுரேந்தர் கோலிக்கு தூக்கு தண்டனை வழங்கி, உத்தரவு பிறப்பித்தார்.ஏற்கனவே, சுரேந்தர் கோலிக்கு, நான்கு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது, ஐந்தாவது தண்டனை.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mangai - Chennai,இந்தியா
25-டிச-201213:36:40 IST Report Abuse
mangai அனைவரும் வரவேற்கிறது ஆச்சர்யமாக உள்ளது.. யார் அந்த பெண் குழந்தையை வெளியில் போய் விளையாட சொன்னது, சேலையின் மீது முள் விழுந்தாலும் முள் சேலையின் மீது விழுந்தாலும் பாதிப்பு பெண் குழந்தைக்கு தானே எனவே இன்மேல் பெண் குழந்தைகள் யாரும் வெளியில் போய் விளையாட கூடாது, அம்மாவிற்கு உதவியாக வீட்டுவேலைகள் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும், இதை ஒன்னும் பெனடிமைபடுத்த சொல்லவில்லை, பாதிப்பு வரக்கூடாது என்று தான் சொல்கிறேன்- இப்படிதானே அனைவரும் கருத்து சொல்ல வேண்டும்.??.
Rate this:
Share this comment
Cancel
Kalignardaas - Thiruvannamalai,இந்தியா
25-டிச-201212:18:41 IST Report Abuse
Kalignardaas சரியான தீர்ப்பு
Rate this:
Share this comment
Cancel
Sembiyan Thamizhvel - THIRUVALLUR,இந்தியா
25-டிச-201211:32:47 IST Report Abuse
Sembiyan Thamizhvel இந்த குற்றவாளிக்கு தண்டனை சரி. ஆனால் இவனோடு இணைந்தது பல கொலைகளை செய்த இவனது முதலாளி, எப்படி விடுதலை செய்யப்பட்டான்? அவனுக்கு தண்டனை இல்லையா?
Rate this:
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
25-டிச-201215:12:24 IST Report Abuse
முருகவேல் சண்முகம்..///Sembiyan Thamizhvel இந்த குற்றவாளிக்கு தண்டனை சரி. ஆனால் இவனோடு இணைந்தது பல கொலைகளை செய்த இவனது முதலாளி, எப்படி விடுதலை செய்யப்பட்டான்? அவனுக்கு தண்டனை இல்லையா? /// அவர் இந்த குடும்பத்தையும்.. அதோடு கூட.. இந்த வழக்கை விசாரிதவர்களின் குடும்பத்தையும் சேர்த்து கவனித்து கொள்வார்... அவ்வளவு வசதிபடைத்தவர்கள், அவர்கள்......
Rate this:
Share this comment
Cancel
Saravanan Saarika - Burdubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-டிச-201211:26:34 IST Report Abuse
Saravanan Saarika Dear Judgemnet is ok but when they are going to hang him, That is very important.......................... Balan Saravanan,Dubai.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Kathirvel - Chennai (Madras),இந்தியா
25-டிச-201209:43:51 IST Report Abuse
Swaminathan Kathirvel மக்களை திசை திருப்ப இப்படி ஒரு தீர்ப்பு ...
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
25-டிச-201206:35:04 IST Report Abuse
ஆரூர் ரங முதலாளிக்கு பதிலா தொழிலாளி தண்டனை பெறுவது முதல் முறையா?
Rate this:
Share this comment
Cancel
Global Citizen - சென்னை,இந்தியா
25-டிச-201203:14:34 IST Report Abuse
Global Citizen தீர்ப்பு என்னவோ சரிதான்... ஆனால் சமுதாயத்தில் இதே மாதிரி குற்றம் புரிந்த அனைவருக்கும் கிடைக்குமா அல்லது இவனைப்போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய குற்றவாளிகளுக்கு மட்டுமா என்பதை அரசு தெளிவு படுத்தவேண்டும். குடித்துவிட்டு BMW காரில் சென்று சிலரைக் கொன்றவர்களுக்கு என்ன தண்டனை இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கிறது? சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை காகிதத்தில் மட்டும் எழுதி வைத்திருப்பதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
25-டிச-201214:57:09 IST Report Abuse
Karam chand Gandhi நீங்கள் சொல்லுவது நீதிமன்றங்கள் நேர்மையாக இல்லை என்பதைத்தானே நீதிபதி தேர்வுகள் நேர்மையான முறையில் நடக்க வேண்டும். அதற்கு Indian Judicial Service ஏற்படுத்த வேண்டும். விரைவில் வரும்....
Rate this:
Share this comment
Cancel
Jai - ,கனடா
25-டிச-201202:47:33 IST Report Abuse
Jai சபாஷ். சரியான தீர்ப்பு. தீர்ப்பை உடனே நிறைவேற்றவும் வேண்டும். இவனை போல் உள்ளவருக்கு மேல் முறையிடு, கீழ் முறையீடு என்று வழக்கை நீட்டினால், அப்படி உள்ள கோப்புகளை உருவாக்குபவரையும், அதை அமரும் இடத்தில வைத்துக்கொண்டு ஆண்டுகளை கடத்தும் உயரிய பதவியில் உள்ளவரையும், இந்தியர்கள், ஒவ்வொரு பெற்றோரும், அவர்களை ஓட ஓட விரட்டவேண்டும். நீதி வழங்கினாலும் நிறைவேற்ற தயங்குபவர்களையும் குற்றவாளிகளாய் கருதவேண்டும்.
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
25-டிச-201214:58:37 IST Report Abuse
Karam chand Gandhi வாப்பா மின்னலு இந்தியா வந்து இதெல்லாம் செய்யலாமே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்