காரைக்குடி: "ஆவினில் இருந்து, அமைச்சர் கோகுல இந்திராவுக்கு வழங்கிய நெய்யின் அளவு குறித்து தெளிவுபடுத்த வேண்டும்' என, காரைக்குடியில் நடந்த சமாதான கூட்டத்தில், பா.ஜ.,வினர் கோரிக்கை விடுத்தனர். காரைக்குடி ஆவினில் முறைகேடு நடப்பதாக, பா.ஜ., சார்பில், நாளை முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தனர். இதுகுறித்த சமாதான கூட்டம், காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ., மாரிமுத்து, ஆவின் பொது மேலாளர் தமிழ்ச்செல்வி பங்கேற்றனர். பா.ஜ., மாவட்ட பொதுச் செயலாளர் குரு நாகராஜன் பேசியதாவது: கடந்த பொங்கலின் போது, அமைச்சர் கோகுல இந்திராவிற்கு, அன்பளிப்பாக, ஆவின் மேலாளர் மணிமாறனால், நெய் கொடுக்கப்பட்டது. அமைச்சரின் அண்ணன் தேவபாண்டியனுக்காக, 200 லிட்டர் பால் கடத்தப்பட்டது. அதை கண்டுபிடித்த பாதுகாவலர் பிலிப் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இவ்வாறு அவர் கூறினார். பொது மேலாளர் பேசுகையில், ""வி.ஐ.பி., க்களுக்கு பொருட்கள் கொடுக்கலாம் என்ற பரிந்துரை, ஆவினில் உள்ளது. அது எந்த அளவு கொடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்படும். பா.ஜ., வினரின் புகார்கள் குறித்து, விசாரணை அறிக்கையின் படி, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இதையடுத்து, முற்றுகை போராட்டத்தை கைவிடுவதாக, பா.ஜ., வினர் அறிவித்தனர். விற்பனை மேலாளர் மணிமாறன் கூறியதாவது: ஆவின் விதிப்படி, ஒன்றரை லட்ச ரூபாய்க்கு, அமைச்சர்கள், வி.ஐ.பி., க்களுக்கு அன்பளிப்பு கொடுக்கலாம். அமைச்சர் கோகுல இந்திராவுக்கு, 2.5 கிலோ நெய், அனுமதியின்படி கொடுக்கப்பட்டது. அமைச்சரின் அண்ணன் தேவபாண்டியன், பல ஆண்டுகளாக பால் விற்பனையாளராக உள்ளார். அவருக்கு பால் கடத்தப்பட்டதாக கூறுவது பொய். பிலிப் என்பவர், முறைகேடாக, வண்டியில் பாலை ஏற்றி விட்டார். அதன்படி நடவடிக்கை, எடுக்கப்பட்டு உள்ளது, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
டெல்டாவில் பயிர்கள் வாடுகிறது கர்நாடக பா ஜ க விடம் பேசி தண்ணீர் விட ஏற்பாடு செய்யுங்கப்பா
அரைலிட்டர் நெய் பின்னாடி அலைய வெக்கமாயில்லை?
பால் கணக்கும் மோர் கணக்கும் பார்த்துகொண்டிருந்தால் நீங்களெல்லாம் நவீன அரசியலுக்கே லாயக்கில்லை
பாதாளத்திலும் (சுரங்க வூழல்) ஆகாயத்திலும் ( 2 ஜி ஸ்பெக்ட்ரம் ) கொடிகட்டிப் பறப்பவர்களை பார்த்து படிங்கப்பா
காங்கிரஸ் மற்றும் டி எம் கே காரர்களோடு ஒப்பிடும் பொழுது இவர்கள் இன்னும் வீட்டுக்குள்ளேயே அரசியல் பண்ணிட்டு இர்ருக்காங்க போலிருக்குது...வெளிய வந்து பாரும்மா... அவங்கவங்க தொலைதொடர்பு, சில்லறை வர்த்தகம், நிலகரி, கிரானைட், ஆயுதங்கள் இதிலேயெல்லாம் என்னம்மா சம்பாதிகிறாங்க... நியும் இருக்கியே பால், நெய், பாமாயில்ன்னு ... நீயெல்லாம் எந்தகாலத்தில சம்பாதிச்சி மல்டிமில்லேனியர் ஆவறது... விடிஞ்சிடும் போ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.