திருவனந்தபுரம்: கேரளாவில், ஆண்டுக்கு, 2,000த்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போவதால், அவர்களை கண்டறிய, "பேஸ்புக்' சமூக வலைதளத்தின் உதவியை நாட, மாநில போலீசார் முடிவு செய்துள்ளனர்.கல்வியறிவு மிகுந்த கேரள மாநிலத்தில் தான், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகமாக நடக்கின்றன. பல விதங்களில், ஆண்டுக்கு, 2,000த்திற்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் காணாமல் போகின்றனர்.அவர்களை கண்டுபிடிக்க மாநில போலீசார் நடவடிக்கை எடுத்தாலும், பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில், போதிய ஒத்துழைப்பு இல்லாததால், காணாமல் போனவர்களை மீட்பது கடினமாக உள்ளது. இதனால், "பேஸ்புக்' இணையதளத்தின் உதவியை நாட, கேரள போலீசார் முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, போலீஸ் ஐ.ஜி., மனோஜ் ஆபிரகாம் தெரிவித்ததாவது:கேரளாவில் இருந்து காணாமல் போனவர்கள் பற்றிய விவரத்தை, "பேஸ்புக்' சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அவற்றை, மலையாளிகள் அனைவருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என, கேட்டு, "பேஸ்புக்' வலைதளத்தை தொடர்பு கொண்டு உள்ளோம்.இதற்கான அனுமதி கிடைத்தால், காணாமல் போனவர்கள் படம் மற்றும் அனைத்து விவரங்களும், "பேஸ்புக்'கில் பதிவு செய்து வைத்துள்ள, உலகின் எந்த பகுதியில் உள்ள மலையாளிகளுக்கும், அவர்களின் கம்ப்யூட்டர், மொபைல் போன் போன்றவற்றில் கிடைத்துவிடும். இதன் மூலம், காணாமல் போனவர்களை மீட்பது எளிதாகி விடும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.