பெங்களூரு நகர பஸ்களில் நவீன தொழில் நுட்பம் அறிமுகம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பெங்களூரு: பெங்களூரு நகர பஸ்கள் மற்றும் பஸ் நிறுத்தங்கள், அதி நவீனமாக மாற்றப்படுகின்றன. பஸ்கள் வரும் நேரம், பஸ்சில் காலியாக இருக்கும் இருக்கைகள் விவரம் போன்ற அனைத்து விவரங்களும், பஸ் நிறுத்தங்களில் காத்திருக்கும் பயணிகளுக்கு அறிவிக்கப்பட உள்ளன. மேலும், தேவைப்பட்டால், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் பெறவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.நாட்டின், "தகவல் தொழில்நுட்ப தலைநகரம்' என, போற்றப்படும் பெங்களூரு நகரில், இன்னும் சில மாதங்களில், அதிநவீன, ஐ.பி.டி., தொழில்நுட்பம் பின்பற்றப்பட உள்ளது. ஒருங்கிணைந்த பஸ் இயக்கம் என்ற, பெயரிலான இந்த திட்டத்தில், பஸ்கள் இயக்கம் அனைத்தும், கம்ப்யூட்டர் மயமாக்கப்படுகின்றன.சோதனை முறையில், ஒரு மாதத்திற்கு முன், மைசூரு நகரில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு, வெற்றிகரமாக செயல்படுவதால், புத்தாண்டு முதல், பெங்களூரில், ஐ.பி.டி., திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.ஒவ்வொரு பஸ் நிறுத்தங்களிலும், "டிஸ்ப்ளே' போர்டுகள் வைக்கப்பட்டு, பஸ்கள் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கின்றன, குறிப்பிட்ட இடத்திற்கு எப்போது வரும், பஸ்சில் காலியாக உள்ள இருக்கைகள் எண்ணிக்கை, அடுத்த பஸ் வரும் நேரம், அந்த பஸ், நிற்கும் இடங்கள் என, அனைத்து தகவல்களும், டிஸ்ப்ளே போர்டில் தெரியும்.அதுபோல, பஸ்சில் இருக்கும் பயணிகளுக்கு, அடுத்து வரும் இடம், சென்றடையும் நேரம் போன்ற அனைத்து தகவல்களும், உட்புறமாக அமைக்கப்படும், "ஸ்பீக்கர்'களில் அறிவிக்கப்படும். இதற்காக, டிரைவர், கண்டக்டர்களிடம், "மைக்' பொருத்திய, "ஹெட்போன்' வழங்கப்படும்.பஸ் பழுதானால், கட்டுப்பாட்டு அறையுடன், உடனே தொடர்பு கொள்ள வசதி, வீட்டில் இருந்தவாறே பயணிகள், பஸ் குறித்த தகவல்களை, எஸ்.எம்.எஸ்., மூலம் அறிந்து கொள்ளும் வசதி என, பல வசதிகளும் வழங்கப்பட உள்ளன.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abu Faheem - Riyadh,சவுதி அரேபியா
25-டிச-201212:33:44 IST Report Abuse
Abu Faheem எல்லாம் நல்லதுதான் ஆனால் இதில் எத்தனை மில்லியன் ஊழல் நடக்கும்? ஏனென்றால் சவபெட்டியிலேயே ஊழல் புரிந்தவர்கலல்லவா இந்த பி ஜே பி யினர் அவர்கள் ஆளும் கர்நாடகா மாநிலத்தில் இந்த ஹய் டெக் சாதனங்களில் கண்டிப்பாக ஊழல் புரிவார்கள் எபதில் சந்தேகமில்லை
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
25-டிச-201207:24:47 IST Report Abuse
Guru உங்கள் சாலை வசதிகளை கொஞ்சம் கவனிங்கப்பா.., போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்