சென்னை:கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணிகளை மாணவர்கள் விற்று வருவதைத் தடுக்க, உயர்கல்வித் துறை, புது திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இதையடுத்து, மடிக்கணினிகளை, அன்றாடம் பயன்படுத்தும் திட்டம், கல்வித் துறையில் விரைவில் அமலாகும்.
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் ஒன்றாக, விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை, கடந்தாண்டு அரசு அறிமுகப்படுத்தியது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் முதலாமாண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு, விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது.கடந்தாண்டு, கல்லூரியில் படித்த மூன்றாமாண்டு மாணவர்கள், 1.42 லட்சம் பேருக்கு, மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. தற்போது, முதலாமாண்டு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.மடிக்கணினி குறித்த போதிய அறிவு இல்லாத காரணத்தால், பாடல்களை கேட்கவும், சினிமா பார்க்கவும் மடிக்கணினிகளை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர் என்ற புகார் உள்ளது. மேலும், சிலர் மடிக்கணினிகளை விற்று விடுகின்றனர்.
அரசின் மடிக்கணினிகள், தற்போது சந்தையில் அடிமாட்டு விலைக்கு அமோகமாகக் கிடைக்கின்றன. கேரள வியாபாரிகள் இவற்றை, 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை வாங்கி, கூடுதல் விலைக்கு கேரளாவில் விற்கின்றனர் என்ற புகார், பரவலாக எழுந்திருக்கிறது; அரசுக்கும் பல புகார்கள் சென்றுள்ளன.மடிக்கணினி விற்பதை தடுக்க, நடவடிக்கைகள் எடுக்க, உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அனைத்து கல்லூரிகளுக்கும், கல்லூரி கல்வி இயக்குனரகம், சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில், மடிக்கணினியை பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், தினமும் கல்லூரிகளுக்கு மடிக்கணினியை கொண்டு வர வேண்டும்; இதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.தொலை தூரங்களிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் மடிக்கணினிகளை கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறியதாவது:ஏழை மாணவனும் கணினி அறிவு பெற வேண்டும் என்ற நோக்கில் கொடுக்கப்பட்ட மடிக்கணினியை, விற்பனை செய்வது வேதனைக்குரியது. கல்லூரியில் உள்ள வரை, மாணவர்கள் மடிக்கணினி பயன்பாடு குறித்து கண்காணிக்கப்படும். மடிக்கணினிகளை தினமும் கல்லூரிகளில் பயன்படுத்தும் வகையில், கணினி வழியாக பாடத்திட்டங்கள் கற்கும் முறை, விரைவில் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எதையும் தவறாகப் பயன் படுத்துவதுதான் கோணல் புத்தியுள்ள மனிதனின் குணம் இதை எளிதில் நீக்க முடியாது பிச்சைக்கு நாம் போட்ட சோற்றை பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனுக்கு விற்பதை நம்மால் தடுக்க முடியுமா 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ' பட்டுக்கோட்டை .அது போக எல்லோருக்கும் கல்வி என்று வரும் போது இப்படி உள்ள திருடர்களும் படிக்கிறேன் என்று சொல்லி தவறான செயல்களில் ஈடுபடுவது 1-2% இருக்கத்தான் செயும்.இதற்காக கொடுத்தவனை குற்றம் சொல்வது சரியல்ல.பாத்திரம் அறிந்து பிச்சை இடுவது அந்தக்காலம் இந்தக்காலத்தில் பிச்சை இடப் போனால் பிடுங்கிக் கொண்டு ஓடுவது தான் நிலை இதற்க்கு சில பேர் ஆதரவுக் குரல் கூட எழுப்புவர்
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்து மாணவ சமுதாயத்தை ஊக்குவித்தது நல்லது தான்... அதனை சரியான முறையில் இயக்கவும், நல்ல முறையில் உபயோகிக்க வைப்பதும் நமது கல்வி திட்டத்தில் இல்லை என்பதே குறைபாடு... அதற்க்கான பயிற்சியை கல்லூரிகள் வழங்குவதில்லை.... அதனினும் கொடுமை அதனை இயக்க சரியான மின்சாரம் தமிழகத்தில் இல்லை... பல நாடுகளில் கல்லூரி மற்றும் உயர்நிலை வகுப்புக்கான பயிற்சி வகுப்புக்கள் (வீட்டுப் பாடம், மற்றும் பயிற்சிகள்) ஆன் லைன் மூலமாக அந்தந்த துறைக்கான ஆசிரியர்க்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும், கல்லூரி குறிப்பிட்ட நாட்களுக்குள் மாணவர்கள் கட்டாயம் அனுப்பி வைத்துவிட வேண்டும்.. இதனால் மாணவர்கள் கட்டாயம் கணினியின்றி பயிற்சி தாட்களை பூர்த்தி செய்து அனுப்ப இயலாது. அதோடு அவர்களுக்கான இணைய வசதியும் தமிழகத்தில் குறைவு...இதனாலே உபயோகமின்றி இலவச மடிக்கணினிகள் மற்ற மாநிலங்களில் விற்பனையாகிறது... கணினியை இலவசமாக கொடுத்தால் மட்டும் போதாது...அதற்கான திட்டங்களை முதலில் யோசித்து அமலாக்கி இருக்க வேண்டும்... கல்வித்தரம் சரி இல்லாத போதும், இன்னும் வீட்டுப்பாடங்களை நோட்டில் எழுதி பழைய பல்லவியை பாடிக்கொண்டிருக்கும் போதும் இவ்வாறு நிகழ்வதில் அதிசயம் ஒன்றும் இல்லை...இதில் மாணவர்களை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை...
QUOTE
LAX - Trichy,இந்தியா
14-டிச-201211:08:17 IST
""லேப்டாப்களை வழங்குவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அதற்கு செய்முறை வகுப்பு ஏற்பாடு செய்து மாணவர்களை வாரத்தில் ஒருமுறையாவது பள்ளிக்கு எடுத்துவரச் செய்ய வேண்டும். ஒரு தனிப்பட்ட ரகசியக் குறியீட்டு என்னை ஒவ்வொரு உபகரணத்துக்கும் வழங்கி அதனைப் பயன்படுத்தினால் மட்டுமே உபயோகிக்கும் உரிமையை ஏற்படுத்தவேண்டும். தொழில்நுட்பங்கள் நிறைந்த இந்த காலத்தில் இதுவும் நடைமுறை சாத்தியமே.... "" QUOTE
இலவச டிவி ,பேன் ,கிரைண்டர் , மிக்சி யாரும் கேட்கவில்லை .மடி கணினி தேவையான ஒன்று. அனைவரும் வாங்க இயலாதது.அம்மா தரமான பொருளாக கொடுக்க வேண்டி சிரத்தை எடுத்துக்கொண்டதால்தான் தரமான கணினி கிடைத்துள்ளது.என்ன ஒன்று, குறைந்த விலையில் கொடுத்திருக்கலாம். உபயோகிப்பதை கண்காணிக்கலாம். மற்றபடி அரிசியை உழைத்து சம்பாதித்து வாங்க செய்யவேண்டும். அப்போதுதான் குடிக்கு செலவு செய்வது குறையும்.உண்மையான நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரசு கொடுக்கலாம் .ஆனால் திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் அதிகாரிகள் கமிஷன் அடிக்காமல் இருந்தால் எல்லாம் ஒழுங்காக நடக்கும்.தமிழ் நாட்டில் முதல் தடைக்கல் இதுதான்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.