கோழிக்கோடு: ரயில் டிக்கெட்டில், தேதி தவறாக அச்சிடப்பட்டிருந்ததால், பயணத்தின் போது, குடும்பத்தினருடன் இறக்கி விடப்பட்டவர், கோர்ட்டை நாடப் போவதாக தெரிவித்துள்ளார்.கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த, கே.சித்தார்த்தன் என்பவர், தன், 70 வயது தாய் மற்றும் மனைவி, குழந்தைகளுடன், திருவனந்தபுரம் சாந்திகிரி ஆசிரமம் செல்ல முடிவு செய்தார். இதற்காக, ஒரு மாதத்திற்கு முன், மங்களூர் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு, டிக்கெட் முன் பதிவு செய்தார்.அவருக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டில், பயண தேதி, 22.12.12 என, "பிரின்ட்' செய்வதற்கு பதிலாக, 22.02.12 என, பிரின்ட் ஆகி இருந்தது. டிக்கெட்டை பெற்ற சித்தார்த்தன், தேதி தவறுதலாக, "பிரின்ட்' செய்யப்பட்டிருப்பதை அறிந்தும், அது பெரிய பிரச்னை இல்லை என, தவறுதலாக நினைத்து, கடந்த வெள்ளிக்கிழமை, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார்.கோழிக்கோட்டிலிருந்து, 50 கி.மீ., தூரத்தில், ரயில் சென்று கொண்டிருந்த போது, டிக்கெட் பரிசோதகர், டிக்கெட்டுகளை பரிசோதிக்க துவங்கினார்.அப்போது, சித்தார்த்தன் டிக்கெட்டில் இருந்த தேதியை பார்த்த, டிக்கெட் பரிசோதகர், "இது, பிப்ரவரி மாதத்திற்கான டிக்கெட், இதில் பயணம் செய்ய முடியாது; கீழே இறங்குங்கள்' என, கூறினார்.டிக்கெட் எடுத்த தேதி, திரும்பி வரும் பயண தேதி என, அனைத்து விவரங்களை கூறியும், ஏற்க மறுத்த, டிக்கெட் பரிசோதகர், சித்தார்த்தன் குடும்பத்தை, அடுத்த ஸ்டேஷனில் இறக்கி விட்டார்.நடுவழியில் பரிதவித்த அந்த குடும்பம், வேறு வழியின்றி, டாக்சி பிடித்து, திருவனந்தபுரம் சென்றது.இந்த விவகாரத்தை, நுகர்வோர் கோர்ட்டில் முறையீடு செய்ய முடிவு செய்துள்ள சித்தார்த்தன், முதற்கட்டமாக, ரயில்வே அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பாவம் அந்த பயணிகள் அவர்களின் பெயர் முன்பதிவு செய்யப்பட்ட சார்ட்டில் இருந்தால் பயணம் செய்ய அனுமதித்திருக்கலாம் . ஆனால் பாலக்காடு ரயில்வே டிவிஷன் டிக்கெட் பரிசோதகர்கள் பயணிகள் சொல்வதை எப்போதுமே காது கொடுத்து கேட்கமாட்டார்கள் . அவரை இறக்கி விட்டு வேறு பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிக பணம் வசூல் செய்திருப்பார். ஏனெனில் எனக்கும் இந்த மாதிரி அனுபவம் ஒருமுறை பாலக்காட்டிலும் ஒருமுறை கோயம்புத்தூரிலும் நடந்திருக்கிறது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.