மதுரை:"உற்பத்தி செலவு அதிகரித்த நிலையில், கரும்பு டன்னுக்கு 2,300 ரூபாய் என அரசு நிர்ணயித்தது கட்டுபடியாகாது; 3,000 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும்,' என, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கரும்பு விவசாயத்தில், இடுபொருட்கள், உரம் விலை கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு உயர்த்துள்ளது. இதில், 200 ரூபாய் விற்ற யூரியா உரம் தற்போது, 350 ரூபாய். பொட்டாஷ் தற்போது 840 ஆக உயர்ந்து விட்டது. டீசல், பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. மின் பற்றாக்குறையால், விவசாயிகள் ஆயில் மோட்டாரை நம்பியுள்ளனர். வெட்டுக்கூலி, லாரி வாடகை கூடியுள்ளது. இதனால் உற்பத்தி செலவு அதிகம்.
முத்தரப்பை கூட்டவில்லை
:"கரும்பு டன்னுக்கு 2,500 ரூபாய் ஆக உயர்த்தப்படும்,' என, சட்டசபை தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க., அறிவித்தது. கடந்த ஆண்டு வாடகையையும் சேர்த்து, 2,100 ஆக அறிவித்தனர். விவசாயிகள், சர்க்கரை ஆலை உரிமையாளர்கள், கூட்டுறவு ஆலைகளின் தனி அலுவலர்களை (முத்தரப்பு கூட்டம்) ஆலோசிக்காமல், விலையை நிர்ணயித்துள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இரு ஆண்டுகளாக முத்தரப்பு கூட்டத்தை கூட்டவில்லை.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு:
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் என்.பழனிச்சாமி கூறியதாவது: கரும்பு விலை நிர்ணயம் குறித்து சுப்ரீம் கோர்ட், மத்திய அரசின் சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலையுடன், மாநில அரசு கூடுதலாக நிர்ணயிக்கலாம் என, 2004 மே 5 ல், உத்தரவிட்டுள்ளது. கரும்பில் மொலசஸ், எத்தனால், மின்சாரம், உரம் போன்ற துணைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அதில் கிடைக்கும் லாபத்திலும் விவசாயிகளுக்கு, ஆலை நிர்வாகத்தினர் பங்கு கொடுப்பதில்லை. விலை பொருள் நிர்ணய கமிஷனின் உண்மை உற்பத்தி செலவை கணக்கில் எடுக்காமல், தற்போது அறிவித்துள்ளனர். ரங்கராஜன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தினால், விவசாயிகள் நிலத்தை இழந்து, கூலியாட்களாக மாற வேண்டிய நிலை ஏற்படும்.
சர்க்கரையும், கரும்பும் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் தொடர வேண்டும். கரும்பை டன்னுக்கு, 3,000 ரூபாய் ஆக நிர்ணயிக்க வேண்டும். தாமதமாகும் பட்சத்தில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, 2,500 ஆக நிர்ணயிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டம் நடத்துவது குறித்து, டிச., 30 ல் சேத்தியார்தோப்பில் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
டன்னுக்கு 3000/- கிடைக்கும், அதாவது பஸ் வில்லை எப்படி ஏறினது ஒரு நாளைக்கு கட்டணம் அதிகரிப்பால் கிடைக்கும் அதிக வருமானம் Rs. 1000 கோடி இதில் அம்மா கணக்கு படி நஷ்ட்டத்தில் இயங்கி கொண்டிருந்த அரசு போக்குவரத்து கழகத்திற்கு சார்ந்தது 30% பாக்கி 70% தனியார் பஸ் இப்ப கணக்கை பாருங்கள் ஒரு நாளுக்கு பஸ் விலைக்கு கூப்பாடு போடாத தனியார் நிறுவனத்திற்கு போகும் வருமானம் Rs. 700 கோடி. இதில் 50% & 50% வைச்சுகோங்க Rs. 350 கோடி அதை 41/2 ஆண்டுக்கு (இந்த ஆட்சி காலம் வரை) 350,00,00,000 x 1642 days = Rs. 5,74,700 கோடியாகும். அது போல் ஆவின் பால் கணக்கு அது தேவைகேற்றார் போல் விற்பனையாகும் அதனால் என்னால் கணக்கிடமுடியவில்லை. இதை எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் சன் டிவியை விட பெரிய ஆள்வர முடியாத என்னங்கிறது தான் எனது டவுட். அதே போல் கரும்பு விவசாயிகள் கூட்டுவதில் 50% தருவதாக இருந்தால் கண்டிப்பாக அவர்கள் கோரிக்கை நிறைவேறும்.
விழுப்புரம்,கள்ளகுறிச்சி,உளுந்தூர்பேட்டை எம்,எல்.ஏ க்கள் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து இடை தேர்தலுக்கு ஏற்பாடு செய்தால் நிச்சயம் ரூ.3,000 கிடைக்கும்....தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதை எல்லாவற்றையும் நிறை வெற்றி விட்டதை போலவும்,,ஏதோ இது ஒன்றுதான் பாக்கியாக்க இருப்பது போலவும்....எதையா நிறைவேற்றுனாங்க? முதியோருக்கெல்லாம் இலவச பஸ் பாசுன்னு கூடத்தான் சொன்னாங்க....ஆனால் நடந்தது என்ன?தேர்தல் அறிக்கையில் சொல்லாத...பஸ் கட்டணத்தை உயர்த்துனாங்க....மின் கட்டணத்தை உயர்த்துனாங்களே ?தேர்தல் அறிக்கையில் சொல்லவா செய்திருந்தாங்க?பாராளுமன்ற தேர்தல் திடீருன்னு வந்தா உங்க கோரிக்கை நிறைவேறும்....
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதை அனைத்தையும் ஓர் ஆண்டில் நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது .பஸ் கட்டண உயர்வு தவிக்க முடியாதது அம்மாவின் அரசு எதையும் நேரடியாக ஒளிவு மறைவின்றி செய்யவே மக்கள் பாதிக்கதவண்ணம் உயர்த்தினர் .கருணாவின் கொல்லைபுற வழியில் பஸ் கட்டண உயர்வும் அமைந்தது என்பதை இந்நாடும் மக்களும் அறிவார்கள் குறிப்பாக சென்னைவாசிகளுக்கு இது நன்றாக தெரியும் (Super delux,Air Bus M Service yellow ,red ,black பஸ் இன் கலருக்கெல்லாம் பஸ் கட்டணத்தை உயர்த்தினர் அக்ருனவின் ஆட்சியில் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.