இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில், சினிமா நடிகையை, பிரிவினைவாதிகள் தாக்கியதை கண்டித்து, நேற்றும், போராட்டங்கள் நடந்தன. பதற்றமான சூழல் நிலவுவதால், மாநிலம் முழுவதும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது."வட கிழக்கு மாநிலங்களில் வசிக்கும், நாகா இனத்தை சேர்ந்தவர்களுக்கு, தனி நாடு வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, என்.எஸ். சி.என்., - ஐ.எம்., என, அழைக்கப்படும், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஆயுதம் ஏந்தி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், 18ம் தேதி, மணிப்பூரில் நடந்த ஒரு விழாவில், அம்மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகை, மொமொகாவை, என்.எஸ்.சி.என்., அமைப்பைச் சேர்ந்த சிலர், தாக்கியதுடன், அவரிடம், தவறாகவும் நடந்து கொண்டனர். இதைக் கண்டித்து, மணிப்பூர் மாநில திரைப்பட சங்கத்தினர், மூன்று நாட்களாக, "பந்த்' நடத்தி வருகின்றனர். இதனால், மாநிலத்தின் பல பகுதிகளில், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் போராட்டத்தின்போது, வன்முறை வெடித்தது. வன்முறையாளர்களை கலைப்பதற்காக, போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், தனியார், "டிவி' நிருபர் ஒருவர், மார்பில் குண்டு பாய்ந்து இறந்தார். இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. சாலைகளின் பல இடங்களில், போராட்டக்காரர்கள், டயர்களை தீ வைத்து எரித்தனர். இதனால், பதற்றமான சூழல் நிலவியது. வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, மாநிலம் முழுவதும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, பொதுமக்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வசதியாக, ஒரு நாள் மட்டும், போராட்டத்தை கைவிடுவதாக, திரைப்பட சங்கத்தை சேர்ந்த, ஒரு தரப்பினர் அறிவித்தனர். இதற்கு, மற்றொரு தரப்பினர், எதிர்ப்பு தெரிவித்ததால், போராட்டங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.