மக்கள் பயன்பாடு கட்டடங்களில், "சி.சி.டிவி' கேமரா கட்டாயம்: தமிழக அரசு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

"மக்கள் பயன்பாட்டுக்குரிய கட்டடங்கள் அனைத்திலும், "சி.சி.டிவி' கேமரா பொருத்த வேண்டும்' என, புதிய அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.

பொதுமக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் கட்டடங்களில், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, "சி.சி.டிவி' எனப்படும், "க்ளோஸ்டு சர்க்யூட் டெலிவிஷன் யூனிட்ஸ்' பொருத்துவதற்கு, தமிழக அரசின் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, புதிய அரசாணை பிறப்பித்து உள்ளது.


பட்டியல்:

"தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் - 2012' என, இதற்கு பெயரிடப்பட்டு உள்ளது. எந்தெந்த கட்டடங்கள், மக்கள் பயன்பாட்டுக்கு உரியவை எனவும், இதில் விளக்கப்பட்டு உள்ளது.அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகள் மற்றும் இது போன்ற கல்வி மையங்கள், இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளன.

அவற்றின் விவரம்:நூறு பேருக்கு அதிகமானவர்கள் தங்கியுள்ள விடுதி, மருத்துவமனை, நர்சிங் ஹோம், கிளினிக், மகப்பேறு மருத்துவமனை அல்லது, 500 ச.மீ., பரப்புளவுக்கு அதிகமான மருத்துவ மையங்கள், லாட்ஜ்கள்.தங்கும் இல்லங்கள் மற்றும் ஸ்டார் ஓட்டல், திருமண மண்டபம், சினிமா தியேட்டர், கேளிக்கை பூங்கா, நீச்சல் குளம், மனமகிழ் மன்றம், அசெம்பிளி ஹால், கலையரங்கம்.ஸ்கேட்டிங் ரிங், மியூசியம், கண்காட்சி அரங்கம், ஜிம்னாசியம், நடன அரங்கம், ஸ்டேடியம் மற்றும் "பார்', வர்த்தகப் பொருட்களை காட்சிப்படுத்தும் அல்லது விற்கும் சந்தை.மொத்தம் அல்லது சில்லரை விற்பனை செய்யும், 500 ச.மீ., பரப்பளவுக்கு அதிகமான கடைகள், வங்கி, ஏ.டி.எம்., சென்டர், இன்சூரன்ஸ் நிறுவனம், நகைக்கடை, உணவகங்களை உள்ளடக்கிய ஷாப்பிங் மால் அல்லது வணிக வளாகம், பெட்ரோல் பங்க்குகள், 100 பேருக்கும் அதிகமானவர்கள் பணியாற்றும் தொழிற்கூடம் அல்லது உற்பத்தி மையம்.தகவல் தொழில்நுட்ப சேவை செய்யும் மையங்கள், ரேடியோ மற்றும் டெலிவிஷன் ஸ்டேஷன், ஒரே நேரத்தில், 500 பேருக்கும் அதிகமானவர்கள் பங்கேற்கும் வழிபாட்டு மையம், அரசியல் அல்லது சமூக அமைப்பு மையம்.நூறு பேருக்கும் அதிகமானவர்கள் பணியாற்றும் அல்லது 500 ச.மீ.,க்கு அதிகமான பரப்பளவுள்ள மத்திய, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள், அரசு சார்பு அலுவலகங்கள், பேருந்து நிலையம் மற்றும் பேருந்து முனையம் ஆகியவையும் மக்கள் பயன்பாட்டுக்குரிய இடங்கள் என, இந்த அரசாணையில் அடையாளம் காண்பிக்கப்பட்டு உள்ளன.


விளக்கம்:


ஒவ்வொரு, 300 ச.மீ., பரப்பளவுக்கும் ஒன்று, என்ற விகிதத்தில் இது அமைக்கப்பட வேண்டும்; பொதுமக்கள் நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில், நுழைவாயில், வெளியில் செல்லும் பாதை, வரவேற்பு அறை என, அனைத்து முக்கிய இடங்களிலும், இதைப் பொருத்த வேண்டுமென்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.தற்போதுள்ள கட்டடங்களில், அரசாணை அமலுக்கு வந்த, டிச., 14ம் தேதியிலிருந்து, ஆறு மாதங்களுக்குள் இதைப் பொருத்த வேண்டுமென கால அவகாசமும் தரப்பட்டுள்ளது.


இடை நீக்கம்:

கட்டடத்தின் உரிமையாளர் அல்லது அதைப் பயன்படுத்துபவர், இதைப் பொருத்த வேண்டும். கொடுத்த கால அவகாசத்துக்குள் இதை அமைக்காவிட்டால், தொழில் மற்றும் வர்த்தக உரிமங்களை ரத்து செய்யலாம் அல்லது தற்காலிக இடை நீக்கம் செய்யலாம் என்றும் அரசாணை தெரிவித்து உள்ளது.இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, மாநகராட்சி, நகராட்சி கமிஷனர் அல்லது பேரூராட்சி செயல் அலுவலருக்கு உரியது.

- நமது நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari Doss - Pollachi,இந்தியா
25-டிச-201218:47:55 IST Report Abuse
Hari Doss கேமராக்கள் எப்போது பழுதடையும் என்று எதிபார்த்து இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Er. S. ARJUNAN - Jeddah,சவுதி அரேபியா
25-டிச-201214:35:36 IST Report Abuse
Er. S. ARJUNAN காட்சி மட்டுமல்ல ஒலியையும் பதிவாக்கும் வகையில் கண்காணிக்க வேண்டும், அப்பத்தான் இங்க வேண்டாம் வேறு எங்காவது வைத்து பணம் தாங்க என்று அதிகாரிகள் கேட்கிறார்களா என அறிய முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
25-டிச-201212:45:14 IST Report Abuse
Rajasekaran Palaniswamy அதெல்லாம் சரி, அதை சரியாக உபயோகபடுத்தவும், காத்திடவும் செய்வார்களா?
Rate this:
Share this comment
Cancel
ungalil oruvan - Chennai,இந்தியா
25-டிச-201211:59:27 IST Report Abuse
ungalil oruvan கண்டிப்பாக நல்ல திட்டம். 10 லட்சம் மேல் செலவு செய்து கட்டும் கட்டிடங்களுக்கு, 10 லட்சம் மதிப்புள்ள கட்டிய வீடுகளுக்கு குறைந்தது 75 ஆயிரம் செலவில் சோலார் அமைக்க வேண்டும். அதில் குறிப்பிட்ட சதவிதம் பணத்தை அரசு மானியமாக கொடுக்க வேண்டும். இதை செய்தாலே மின்சாரத்தில் தன்னிறைவு பெற்று விடுவோம்.
Rate this:
Share this comment
Cancel
Rajasanthanam - Mayiladuthurai,இந்தியா
25-டிச-201210:53:22 IST Report Abuse
Rajasanthanam வரவேற்கக்கூடிய உத்தரவுதான். அரசாங்கம் இதற்கான வாட் வரியில் இருந்து விலக்கு அல்லது குறைதாலோ (தற்போது 14.5%) எல்லோருக்கும் நடைமுறைப்படுத்த வசதியாக இருக்கும்.
Rate this:
Share this comment
tamilnambi - new delhi,இந்தியா
25-டிச-201212:25:25 IST Report Abuse
tamilnambiமுதலில் தமிழக அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Murugesan Mayandi M - the nilgiris ,இந்தியா
25-டிச-201209:38:02 IST Report Abuse
Murugesan Mayandi M சரியான திட்டம் குற்றங்கள் குறையும் ,தடுக்கப்படும் முற்போக்கான சிந்தனை பாராட்டுக்கள் .அதே சமயம் பின்வாங்காமல் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
25-டிச-201208:11:52 IST Report Abuse
T.R.Radhakrishnan வரவேற்கப்பட வேண்டிய திட்டம். சில தீய சக்திகள், காமெரா தயாரிப்பாளர்களுக்கும், அரசுக்கும் ரகசிய தொடர்பு என்று புரளி கிளப்புவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
25-டிச-201205:07:45 IST Report Abuse
Thangairaja தேவையானது தான்.....ஒப்பல்லாம் சமூல விரோதிகள் கேமறை தான் முதலில் உடைக்கிறார்கலாம். அதை கண்டுபிடிக்க ரகசிய கேமராக்களையும் அந்த இடங்களில் பொருத்தலாம்.
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
25-டிச-201204:39:08 IST Report Abuse
Guru நல்ல திட்டம்.., அப்படியே ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வைத்தால் இன்னமும் நன்றாக இருக்கும் சட்டம் விதிமீறல்களில் அதும் ஒரு முக்கியமான இடம்...
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
25-டிச-201204:37:41 IST Report Abuse
N.Purushothaman இதை கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வந்திருக்க வேண்டும்.....குறைந்த பட்சம் இப்போவாது வருகிறது என்பதை நினைத்து ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தான்....அதே போல் தொழில் ,வியாபாரம் செய்பவர்கள் பாதுகாப்பு கருதி தாமாகவே முன் வந்து அவரவர் இடங்களில் இதை பொருத்தினால் கண்டிப்பாக பாதுகாப்பு விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.......அதே போல் மாநில நெடுஞ்சாலைகள், சிக்னல் போன்றவற்றிலும் காமரா பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்