சிம்லா: இமாச்சல பிரதேசத்தில், பா.ஜ., சட்டசபை கட்சி தலைவராக, பிரேம் குமார் துமால் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவராக, அவர் பதவியேற்கவுள்ளார்.சமீபத்தில் நடந்த, இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த, காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியாக இருந்த, பா.ஜ., தோல்வியடைந்தது.மாநிலத்தின் புதிய முதல்வராக, காங்கிரசைச் சேர்ந்த, வீர்பத்திர சிங், இன்று பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட, பா.ஜ., எம்.எல். ஏ.,க்கள், தங்கள் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக, சிம்லாவில் நேற்று கூடினர். இதில், பதவி விலகும் முதல்வர், பிரேம் குமார் துமால், பா.ஜ., சட்டசபை கட்சி தலைவராக, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவர், எதிர்க்கட்சி தலைவராக, பதவியேற்கவுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.