Advertisement
பிரதமரின் காலம் கடந்த அறிவிப்பு பாரதிய ஜனதா கடும் அதிருப்தி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012,23:42 IST

புதுடில்லி: "டில்லியில், மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட விவகாரத்தில், தொடர்புடையவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு, நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இல்லை' என, பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.டில்லியில், ஓடும் பஸ்சில் மருத்துவக் கல்லூரி மாணவி, ஆறு பேர் கொண்ட கும்பலால், கற்பழிக்கப்பட்டார். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடிவடிக்கை எடுக்கக் கோரியும், டில்லியில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.போராட்டத்தை ஒடுக்க, போலீசார் தடை உத்தரவு பிறப்பித்தனர். இதனால், போலீசாருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வன்முறையில் இறங்கினர். இளம்பெண்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், நேற்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து, பிரதமர் மன்மோகன், "டிவி'யில் உரையாற்றினார்.பிரதமரின் அறிவிப்பு குறித்து, பாரதிய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர், பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது:பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோள், நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இல்லை. இந்த அறிவிப்பு மிகவும் காலம் தாழ்த்தி விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான சட்டங்களையும், கடும் நடவடிக்கைகளையும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். கொதிப்படைந்துள்ள மக்களின் எண்ணத்தை புரிந்து கொள்ள, அரசு தவறிவிட்டது.பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக, கடும் சட்டங்களை இயற்ற, பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இந்த கூட்டம், ஐந்து நாள் நடந்தாலே போதும். இந்த பிரச்னை தொடர்பாக, அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இவ்வாறு, பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
jagan - Chennai,இந்தியா
25-டிச-201203:41:56 IST Report Abuse
jagan இந்த அம்மா பிரதமரா வர்றதுக்கு சிங்கே பரவாஇல்ல
Rate this:
1 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.