உஜ்ஜயினி: மத்திய பிரதேசத்தில், பள்ளி சிறுமியை கடத்தி, கற்பழிக்க முயன்றவர்களை கைது செய்ய கோரி, கிராமத்தினர் நடத்திய போராட்டம், வன்முறையாக மாறியதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உஜ்ஜயினி அருகே, ஒரு கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி, நேற்று முன்தினம், பள்ளிக்குச் சென்று திரும்பி வரும் வழியில், மற்றொரு பிரிவைச் சேர்ந்த இளைஞர்களால் கடத்தப்பட்டாள். இதை அறிந்த கிராமத்தினர், அந்த இளைஞர்களை விரட்டி அடித்தனர்.இளைஞர்களின் சமுதாயத்தினர், இதை, மத மோதலாகக் கருதி, தாக்கிய கிராமத்தினருக்கு பதிலடி கொடுத்தனர். இரு தரப்பிலும் வன்முறை ஏற்பட்டதால், கலவரத்தைக் கட்டுப்படுத்த, அந்த பகுதிகளில், நேற்று, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பள்ளி மாணவியை கடத்திச் சென்று, பலாத்காரம் செய்த, அல்டாப், சல்மான், இர்ஷாத் உட்பட, ஐந்து இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலத்தின், முசாபர் நகர் பகுதியில், 14 வயது சிறுமியை காதலித்த இளைஞன், அந்த சிறுமியை, தன் இரு நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்துள்ளான். பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். தப்பி ஓடிய, ஜாவத், பெர்வாய்ஸ், மன்னான் ஆகிய, மூன்று இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.