பெங்களூரு: ""தமிழக அரசின் வற்புறுத்தலுக்கு ஆட்பட்டு, காவிரி நதி, நீர் பிடிப்பு பகுதிகளை பரிசீலிக்காமல், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கூடாது,'' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கடிதம் எழுதியுள்ளார்."காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, விரைவில், அரசிதழில் வெளியிட வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, இரண்டு நாட்களுக்கு முன், தமிழக முதல்வர் ஜெயலலிதா, இரண்டாவது முறையாக கடிதம் எழுதியிருந்தார்.இதற்கு பதிலடியாக, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும், பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கூறியிருப்பதாவது:காவிரி நடுவர் மன்றத்தின் ஒரு தலைபட்சமான இறுதி தீர்ப்பை, அரசிதழில் மத்திய அரசு வெளியிடக் கூடாது. ஏற்கனவே, நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், கர்நாடக அரசு சார்பில் தாக்கல் செய்த மனு, நிலுவையில் உள்ளது.இது மட்டுமின்றி, காவிரி நடுவர் மன்றத்திலும், உள்மாநில தண்ணீர் விவாத சட்டப்படி, இறுதி தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரி, மனு தாக்கல் செய்துள்ளோம். எனவே, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடக் கூடாது.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.