Freedom at midnight not to roam freely: Congress leader's shocking comment | பெண்கள் நள்ளிரவில் சுற்றி திரிய கூடாது: ஆந்திர காங்., தலைவர் பேச்சால் சர்ச்சை| Dinamalar

பெண்கள் நள்ளிரவில் சுற்றி திரிய கூடாது: ஆந்திர காங்., தலைவர் பேச்சால் சர்ச்சை

Updated : டிச 26, 2012 | Added : டிச 24, 2012 | கருத்துகள் (185)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Freedom at midnight not to roam freely: Congress leader's shocking comment

ஐதராபாத் :"" நம் நாட்டுக்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது என்பதற்காக, பெண்கள், நள்ளிரவில், இஷ்டத்துக்கு சுற்றித் திரியக் கூடாது,'' என, ஆந்திர மாநில காங்., தலைவர் சத்யநாராயணா கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தான் பேசியதற்கு, அவர் வருத்தம் தெரிவித்தார்.

ஆந்திர மாநில, காங்., தலைவரும், மாநில போக்குவரத்து அமைச்சருமான, பொஸ்தா சத்யநாராயணா, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:நம் நாட்டுக்கு, நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது உண்மை தான். அதற்காக, நள்ளிரவில், ஊர் சுற்றக் கூடாது. குறிப்பாக, பெண்கள், நள்ளிரவில், வெளியில் சுற்றுவது, ஆபத்தானது. நள்ளிரவு நேரங்களில், தனியார் பஸ்களில் பயணிக்காமல் இருப்பதும், நல்லது தான்.இவ்வாறு சத்யநாராயணா கூறினார்.

இவரின் பேச்சுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மாலையில், மீண்டும் செய்தியாளர் கூட்டத்தை கூட்டினார். அப்போது, அவர் கூறியதாவது:நானும், ஒரு தந்தை தான்; எனக்கும், குழந்தைகள் உள்ளன. ஒரு தந்தையாக, என் கோபத்தை வெளிப்படுத்தினேன். டில்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம், என்னை மிகவும் பாதித்துள்ளது. இது, கண்டனத்துக்குரியது. நாட்டையே, இந்த சம்பவம் உலுக்கியுள்ளது. நான் தெரிவித்த கருத்து, பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், அதற்காக வருந்துகிறேன். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, மத்திய, மாநில அரசுகள், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சத்யநாராயணா கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (185)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Eswaran - Palani,இந்தியா
31-டிச-201212:41:14 IST Report Abuse
Eswaran சட்டம் கடுமையாக இருந்தாலும் அதை செயல் படுத்தும் அதிகார வர்க்கம் நேர்மையாகவும் தைரியமாகவும் இருக்க வேண்டுமே?
Rate this:
Share this comment
Cancel
Arun Steve - chennai,இந்தியா
27-டிச-201223:17:07 IST Report Abuse
Arun Steve அமைச்சர் சொன்னதில் தவறில்லை,பொறுப்புள்ள தகப்பனாகவும் தெய்ரியமுள்ள அமைச்சராகவும் பேசியிருக்கிறார் இதுபோல் அமைச்சர்கள் நம் நாட்டிற்கு தேவை.
Rate this:
Share this comment
Cancel
Arun Steve - chennai,இந்தியா
27-டிச-201222:24:10 IST Report Abuse
Arun Steve அமைச்சர் சொன்னதில் தவறில்லை,இதுபோல் பொறுப்புள்ள அமைச்சர்கள் நம் நாட்டுக்குத் தேவை.
Rate this:
Share this comment
Cancel
Kumar Nanda - afghan,ஆப்கானிஸ்தான்
26-டிச-201204:29:50 IST Report Abuse
Kumar Nanda என்னால் கருத்து எழதாமல் இருக்க முடியவில்லை. சுதந்திரம் வேறு, முன்எச்சரிகை வேறு. நாட்டின் மிக பெரிய பதவியில் உள்ள பிரதமர் எல்லா அதிகாரமும் உண்டு. அதற்காக அவர் பாதுகாவலர் இல்லாமல் செல்லமுடியுமா? போட்டு தள்ளிடுவார். அதன்பின் அவர் உரிமை, சுதந்திரம், பிற அனைத்தும் பேசி என்ன பலன்? இதற்காக நம் காவலரை குறை கூற முடியுமா? சட்டம், மற்றும் அனைத்தும் தயாராக உள்ளன. ஆனால் அவை யாவும் நிகழ்வு பின்னர் தான் வரும். என்னிடத்தில் கணிசமான பணம் உள்ளது எனில் நான் மறைத்து தான் எடுத்து செல்ல வேண்டும். அதை விட்டு எல்லோர்க்கும் தெரிகிற மாதிரி எடுத்து செல்வேன், அது எனது பிறப்புரிமை என்று கோரினால், சட்டம் இயற்றலாம். ஆனால் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
27-டிச-201218:07:15 IST Report Abuse
Karam chand Gandhi நாங்கள் காதலிப்போம் நடுஇரவு ஊர்சுற்றுவோம் அரசாங்கம் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஆண்கள் அடங்கி இருக்க வேண்டும் எந்த கேள்வியும் கேட்க கூடாது. இதுவே பெண்ணுரிமை நீ அதை ஒத்துக் கொள்ள வேண்டும் இது கேவலமான கருத்து இல்ல?...
Rate this:
Share this comment
Cancel
Blacksmith Two - woodland,சிங்கப்பூர்
25-டிச-201218:44:08 IST Report Abuse
Blacksmith Two இதில் பெறசினை என்னவென்றஇல் பெண்களுடுது இல்லை அவர்களின் பெர்த்ரோர்களின் வளர்ப்பு சறேயில்லை பாருங்கள் இத்துணை அண்ணன் , தம்பி, அப்பா, அறிவுரை மண்டையில் யெரவில்லயெஹ், பெண்களை பாதுக்காக பெர்த்ரோகளுக்கு உரிமை சட்டம் வேண்டும் . இல்லையேல் கடவுள் குட காப்பத முடியாது
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
25-டிச-201218:21:57 IST Report Abuse
சு கனகராஜ் நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தால் நள்ளிரவில் பெண்கள் வெளியே அலையை கூடாது என்று சொல்வது தப்பு பலர் இரவில் தொலை தூர ஒருக்கு பயணம் செய்வதில்லையா பெண்கள் நைட் ஷிப்ப்ட் வேலை செய்யா வில்லையா டாக்டர் நர்சு என எவ்வலோவே இரவு வேலைகள் செய்பவர்கள் உள்ளனர் அப்படி போனால அந்த குற்றத்திற்கு எல்லோரும் ஒத்து ஊதா முடியுமா அமைச்சர் பேசியதில் தவறு உள்ளது அதை பூசி மழுப்பி விட்டார் மருத்துவமனைக்கு avasaramaaga இரவில் யாரும் செல்லாமல் irukka முடியுமா mothathil theeviravaathathai kattukul kondu vara vum
Rate this:
Share this comment
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
27-டிச-201200:13:15 IST Report Abuse
Sundeli Siththarஐயா பெரியவரே... நள்ளிரவில் பயணம் செய்யக் கூடாது என்று யார் சொன்னார்கள்? எங்கு போகவேண்டும் என்பதற்கு வரைமுறை வேண்டாமா... உங்கள் வீட்டு பெண்களை நள்ளிரவு ஆனாலும் பரவாயில்லை என்று வெளியே தனியாக செல்ல அனுமதிப்பீர்களா?...
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
25-டிச-201218:16:08 IST Report Abuse
சு கனகராஜ் nalliravil
Rate this:
Share this comment
Cancel
jey - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்
25-டிச-201218:01:57 IST Report Abuse
jey நமது கலாசாரம் பண்பாடு பத்தி உங்களுக்கு தெரியுமா?.. அதுவும் இல்லாம எல்லோருக்கும் இத சொல்லிகொடுக்கிறது நடக்கிற காரியம் இல்ல... சோ, கோபப் படாம புத்திசாலித்தனமா நடந்துக்கங்க... அதுதான் எல்லோருக்கும் நல்லது...
Rate this:
Share this comment
Cancel
jey - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்
25-டிச-201217:57:24 IST Report Abuse
jey இவர் சொன்னதில் தப்பு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இந்த ஏரியாவுல வெறி நாய் இருக்கு அந்தப் பக்கம் போகாதீங்கன்னு SONNAA ஆறு அறிவு இருக்கவன் போகவே மாட்டன். இல்ல எனக்கு சுதந்திரம் கிடச்ருசின்னு அந்த பக்கம் PONAAL நாய் மட்டும் இல்ல ENTHANNAAYALUM ஒன்னும் பண்ண முடியாதுன்னு தெனாவெட்ட போனா நாய் கடிக்கத்தான் செய்யும் இத எந்த சுதந்திரத்தாலும் தடுக்க முடியாது. அதனால நல்லது சொன்னா கேட்டுக்கணும். இல்ல உங்களுக்கு மனசாட்சி இருக்கா அப்படி இப்படின்னு முட்டாள் தனமா பேசுறதுனால சில வெறி நாய்களிடம் இருந்து தப்பிக்க முடியாது. சோ, என் அன்பு சகோதரி பாதுகாப்பான இடத்தில சுதந்திரமா இருங்க தப்பில்ல. பட் பாதுகாப்பு ரெம்ம்போ அவசியம்..
Rate this:
Share this comment
Cancel
Maali Raja - Tuticorin,இந்தியா
25-டிச-201217:53:58 IST Report Abuse
Maali Raja அமைச்சர் சொன்னதில் தவறே இல்லை. இந்த பெண்ணை பெத்தவங்களை தூக்கி முதல்ல உள்ள போடணும். தலை கொளுத்து ராத்திரி நேரம் வெளிய போனது தப்பு.
Rate this:
Share this comment
deepak - coimbatore,இந்தியா
29-டிச-201200:32:03 IST Report Abuse
deepakஎன்ன கொடுமை இது... எப்பொழுது பெண்கள் நள்ளிரவில் சுதந்திரமாக நகைகளுடன் நடமாட முடிகிறதோ அப்பொழுது தான் இந்நாட்டிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று சொன்ன காந்தியடிகளின் கனவில் இத்தனை ஆண்டுகள் ஆகியும் பாதி கூட நிறைவேரவில்லையே, அட நகைகளை விடுங்க, நள்ளிரவில் சுதந்திரமாக செல்ல கூட முடியவில்லை என்றால், இது நம்முடைய கையாலகதநத்தை தான் காட்டுகிறது. தப்பு செய்தவனை விட்டு பெற்றவர்களை தண்டிக்க சொல்லும் நீங்கள் இன்னும் ஐதர் அலி காலத்திலேயே வாழ்கிறீர்கள் என்று தான் என்ன தோன்றுகிறது. இது போன்ற செயல்கள் நடக்கும் பொழுது அதை மாற்ற யோசிப்பதை விடுத்து விலகிசெல்லும் மனப்பான்மை இருக்கும் வரை குற்றங்கள் பெருகி கொண்டு தான் இருக்கும்... எங்கோ நடந்த ஒரு குற்றம் நாளை உங்கள் வீட்டிலும் நடக்கலாம் ஜாக்கிரதை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை