Advertisement
1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012,23:46 IST

புதுச்சேரி:புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், 1 செ.மீ., கன சதுர அளவுள்ள குடில் செய்து, தலா, ஒவ்வொரு அரிசியில் குழந்தை இயேசு, மாதா, சூசையப்பர், கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்களை உருவாக்கியுள்ளார். புதுச்சேரி, அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர், சுந்தரராசு, 35; பாகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், நுண்கலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, 1 செ.மீ., கன சதுரம் அளவுள்ள குடில் செய்துள்ளார்.அந்தக் குடில் நடுவே, மிளகுத் தூளைப் பயன்படுத்தி, மலையை உருவாக்கியுள்ளார். தலா, ஒவ்வொரு அரிசியில் ஒரு உருவமாக, குழந்தை இயேசு, மாதா, சூசையப்பர், தேவதை, கிறிஸ்துமஸ் தாத்தா உருவாக்கியுள்ளார்.இயற்கையான புல், செடி, பூக்கள் போன்றவைகளும், இயேசு பிறக்கும் போது தெரியும் வால் நட்சத்திரம், குழந்தை இயேசு மீது படுவது போலவும், உயிரோட்டமாக குடில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை லென்ஸ் உதவியுடன் மட்டுமே, தெளிவாக பார்க்க முடியும். இந்த மிகச் சிறிய கிறிஸ்துமஸ் குடிலை, அப்பகுதி மக்கள் பலர் பார்வையிட்டு ரசித்து, ஆசிரியருக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
25-டிச-201220:45:46 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM பாராட்டுகள் ..................ஆசிரியருக்கு ...................வாழ்த்துகள் ...........அவர் முயற்சிக்கு .................
Rate this:
1 members
1 members
7 members
Share this comment
sethu - Chennai,இந்தியா
25-டிச-201219:09:09 IST Report Abuse
sethu அரசு ஆசிரியர் மதங்களுக்கு அப்பார்ப்பட்டவார இருக்கவேண்டும் ,அரசியலும் அரசு வூளியர்களும் மதத்திற்கு அடிமையாகாமல் இருந்தால் நல்லது.
Rate this:
4 members
0 members
3 members
Share this comment
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
25-டிச-201211:17:14 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும், இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள். கர்த்தாவின் ஆசி உங்களுக்கு கிடைக்கட்டும்.
Rate this:
0 members
0 members
9 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.