பெங்களூரு: பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும், தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கிற்கு, அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமிப்பதில், கர்நாடக அரசு, தாமதம் செய்து வருகிறது.சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க, 2003ல், பெங்களூருவில் சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டது. இந்த வழக்கின், அரசு சிறப்பு வழக்கறிஞராக, 2004ல் ஆச்சார்யா நியமிக்கப்பட்டார்.ஜெயலலிதா வழக்கு விசாரணையின் போது, வாதாடி வந்த ஆச்சார்யாவை, 2011 ஆகஸ்டில், கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரலாக, அரசு நியமித்தது. இரு பதவியில், ஏதாவது ஒன்றில் இருக்கும்படி, அரசு உத்தரவிட்டது. இதனால், மாநில அட்வகேட் ஜெனரல் பதவியை, ஆச்சார்யா ராஜினாமா செய்தார்.ஜெயலலிதா வழக்கு விசாரணையில், தொடர்ந்து அவர் ஆஜராகி வந்தார். கடந்த பிப்ரவரியில், ஜெயலலிதா வழக்கின், அரசு சிறப்பு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலகுவதாகக் கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வழக்கிலிருந்து, தன்னை விலகிக் கொள்ளும் படி, அரசு சார்பில் நிர்பந்தம் செய்வதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலாலும், அரசு சிறப்பு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலகுவதாகக் கூறினார்.இதையடுத்து, அப்பொறுப்பு இன்னமும் காலியாகவே உள்ளது. கடந்த சனிக்கிழமையன்று, சசிகலாவிடம் கேள்விகள் கேட்டபோது, ஆச்சார்யா பொறுப்பில் இருந்த போது, அரசு உதவி வழக்கறிஞராக இருந்த சந்தேஷ் சவுட்டா, அரசு சார்பில் ஆஜரானார்.தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம், 1,340 கேள்விகளுக்கான பதில்கள் வாங்கப்பட்டுள்ளன. சசிகலாவிடம், 1,032 கேள்விகளுக்கான பதில்கள் பெறப்பட்டுள்ளன. வரும், 26ம் தேதியிலிருந்து சுதாகரனிடம் கேள்வி கேட்பது துவங்குகிறது.சொத்து குவிப்பு வழக்கு, இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதால், சிறப்பு அரசு வழக்கறிஞர் ஒருவர், கோர்ட்டில் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். இந்த நெருக்கடியான நேரத்தில், தகுதியானவரை நியமனம் செய்வதில், கர்நாடக அரசு மெத்தனம் காட்டுவதாக, மூத்த வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அவர்கள் எப்படி புது வழக்கறிஞரை நியமிப்பார்கள் ? திரு ஆச்சார்யா விலக வேண்டும் என்பதற்குத்தானே முதலில் அவரை அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பார்த்தது ? அவர் மறுத்ததால் அவர் மீது பிரஷர் கொடுத்து அவர் வீட்டுக்கே போய்விட்டார்... அவர்கள் காரியம் நிறைவேறி விட்ட பட்சத்தில் எப்படி புதிதாக ஒருவரை அதுவும் விரைவில் நியமிப்பார்கள் ? திரு மோடியின் விளையாட்டு இது...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.