Advertisement
தீ விபத்தில் எலும்பு கூடானது ஆம்னி பஸ்: டிரைவர் சாமர்த்தியத்தால் பயணிகள் தப்பினர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012,23:47 IST

ஓமலூர்: ஓமலூர் அருகே, ஆம்னி பஸ்சில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், பஸ் முழுமையாக எரிந்து எலும்புக்கூடானது. டிரைவரின் சாமர்த்தியத்தால், பஸ்சில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 12:20 மணிக்கு, 35 பயணிகளுடன், "சவுத் இந்தியா' என்ற தனியார் ஆம்னி பஸ், சென்னைக்கு புறப்பட்டது. வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த டிரைவர் அன்பழகன், 35, பஸ்சை ஓட்டினார். ஓமலூரை கடந்து, காமலாபுரம் பிரிவு ரோடு சந்திப்பில் பஸ் சென்ற போது, இரவு, 12:50 மணிக்கு, இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. உஷாரான டிரைவர், பஸ்சை ஓரங்கட்டி நிறுத்தி, புகை வந்த பகுதியை பார்த்த போது, திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது. அதிர்ச்சியடைந்த டிரைவர் அன்பழகன், பஸ்சில் இருந்த பயணிகளை இறங்கும்படி கூச்சல் போட்டார். தூக்கத்தில் இருந்த பயணிகள், டிரைவரின் கூச்சலைக் கேட்டு, பஸ்சில் இருந்து வேகமாக கீழே இறங்கினர். பயணிகள் அனைவரும் இறங்கிய உடனேயே, பஸ் குபீரென தீப்பிடித்து எரிந்தது. ஓமலூர் தீயணைப்பு படையினர் சென்று, பஸ்சில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி, இரவு, 2:15 மணிக்கு, தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்தில், ஆம்னி பஸ் முழுமையாக எரிந்து, எலும்புக்கூடாக மாறியது. அதிகாலை, 3:00 மணிக்கு, மாற்று பஸ் ஏற்பாடு செய்து, பயணிகள் அனைவரும், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஓமலூர் வாகன போக்குவரத்து ஆய்வாளர் சுப்ரமணி, பஸ் தீ விபத்து குறித்து, நேற்று ஆய்வு செய்தார். பஸ்சில் பொருத்தப்பட்ட "ஏசி', கேபிள் ஒயரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, தீ விபத்து நடந்தது தெரியவந்தது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Chenduraan - kayalpattanam,மாலத்தீவு
25-டிச-201208:25:00 IST Report Abuse
Chenduraan சாமர்த்திய ஓட்டுனருக்கு வாழ்த்துக்கள் இல்லையானால் இன்று சோக நாளாக ஆகியிருக்கும்
Rate this:
0 members
0 members
10 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.