வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அட நாசமா போன வியாபாரிகளே போன வருடம் கிலோ 10 கொடுத்து நெல் வாங்கினீர்கள் இந்த வருடம் 18 கொடுத்து வாங்கறீங்களே ஆனாலும் அரிசி விலையையும் ஏத்தறீங்க, உங்களால் யாருக்கு என்ன லாபம் விவசாயிக்கும் இல்லை பொது மக்களுக்கும் இல்லை இடையில் நின்று தின்று கொழுக்கறீங்க ஆனால் விவசாயிகள் கடனுக்கு வாங்கி பயிர் செய்து விளைச்சலையும் உங்களுக்கு கொடுத்து கடனாளி ஆகி தற்கொலை செய்து கொள்ளவது தான் மிச்சம் இதுக்கு வால்மார்ட் கடையே வரலாம் தப்பில்லை அட்லீஸ்ட் கொஞ்ச நாளைக்கு நாங்க உயிரோடு இருப்போம் ஏன் என்றால் கொஞ்ச நாளைக்கு அவர்கள் விவசாயிகளிடமே கொள்முதல் செய்வதாக சொல்கின்றார்கள் நீங்களும் கொஞ்ச நாளைக்கு கழ்டம் என்றால் என்ன என்பதை அனுபவியுங்கள் அப்பத்தான் எங்களின் வலி உங்களுக்கு புரியும் இப்போ நீங்க தர்ற 18 ரூபாய்க்கு போன வருடம் எங்களுக்கு ஒரு ரெண்டு ரூபா சேர்த்து கொடுத்திருந்தால் எவ்வளவு விவசாயிகள் பிழைதிருபார்கள்
கண்மாய்கள் அனைத்தும் அரசியல் வாதிகளால் கபளீகரம் செய்யப்பட்டுவிட்டன.தடுப்பணைகள்
கட்டுவதை பற்றி எந்த ஒரு அரசியல்வாதியும் பேசுவதில்லை. நிலங்கள் அனைத்தும் வெட்டு மனைகளாக மாறிவிட்டன. மக்களின் மனதில் பேராசை புகுந்து கொண்டுவிட்டது. ஆற்று மணல் கொள்ளை அடிக்கபடுகின்றது. இதை பற்றி பேசும் ஆட்களை தாக்குவதை வழக்கமாக கொண்டுள்ள கும்பல்கள் நம் நாட்டில் ஏராளமாகிவிட்டன.யார் எப்படி போனால் என்ன தன்னை பத்திரமாக பார்த்துகொள்வது எப்படி என யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.ஊழல் பெருக்கு எடுத்து ஓடுகிறது.தன்னலமில்லா அரசியல்வாதியால் மட்டுமே மாற்றம் கொண்டு வர இயலும். விளை நிலங்கள் வீடுமனைகளாக மாற்றுவது உடனிடியாக
தடுக்கப்படவேண்டும். கல்லணையில் இருந்து செல்லும் நீர் கடலுக்கு செல்லாமல் தடுப்பணைகள் கட்ட அரசு முன் முயற்சி எடுக்கவேண்டும். இல்லையேல் ஒரு பிடி சோற்றுக்கு கையேந்த நேரிடும்.இன்னொரு பத்து வருடங்களில் இந்த நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. அப்போது தெரியும் உண்மையான விவசாயி இவ்வளவு நாளாக உதாசீனப்படியது.
கொடுமை, கொடுமையிலும் கொடுமை. "சோழவளநாடு சோறுடைத்து" போன்ற மொழிகள் பொய்த்து போனதே அந்த வானும், பக்கத்து மாநிலமும் எம் மண்ணை வஞ்சித்து விட்டன. சட்டப்படி தமிழக முதல்வர் தொடர்ந்து போராடவேணும் காவேரி நீருக்காக. இந்த விஷயத்தில் மொத்த தமிழகமும் உங்கள் பின்னால். தயவுசெய்து இதில் யாரும் அரசியல் கலக்க வேண்டாம். இது ஏழை விவசாயிகளின் கண்ணீர் வேண்டுகோள். "இப்போதைய தேவை சட்ட நடவடிக்கை, நீண்டகால தேவை தடுப்பணைகளும், நதிகள் இணைப்பும் மட்டுமே".
தங்கம் விளையிற பூமி நம்ம தமிழ்நாடு. இன்னைக்கு அடுத்த மாநிலத்திலிருந்து நெல் இறக்குமதி. ரொம்ப வருத்தமா இருக்கு. இருக்குற ஏரி, குளம், குட்டை எல்லாத்தையும் ஒழுங்க தூர்வாரி முறையான மதகு அமைத்து இருந்தா இந்த நிலை கொஞ்சம் மாறி இருக்கும். ஒவ்வொரு ஊருலயும் ஒரு சில திருட்டு பயலுக இருக்கத்தான் செயுறானுங்க, எங்க ஊருல ஏரிய எல்லாம் நிலமாக்குரனுங்க.எவனும் கேக்குறதில்ல.
நெல் , புல், பால் , கொள்ளு , எண்ணெய், வெண்ணை , மின்சாரம், சாராயம், நீர் எல்லாம் இனி தமிழகம் வெளியில் இருந்துதான் வாங்க வேண்டும் . ஏன் CM கூட கர்நாடக விலிருந்து சினமாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டு இப்போது ஆட்சிக்கட்டில்லில்...இதைதான் வால்மார்ட் நான் விவசாயி வசம் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்ய போகிறார்கள். அரசு சும்மா வரிபோட்டு சாராயம் விற்று அந்நிய நாட்டு நிறுவனம் வசம் கைநீட்டி , இடம் மாறுதல் நேரத்தில் அரசு ஊழியர் ஆசிரியர் வசம் காசுபார்த்து தேர்தல் நேரம் வீசி இறைத்து , மத்திய அண்டை மாநில கூட சண்டை போட்டு தமிழனை எல்லோருக்கும் எதிரியாய் ஆக்கிப்புட்டு - ஐயோ ஐயோ இனி யோசித்து என்ன ஆகும் ?? இன்னும் 4 ஆண்டில் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் - இருக்கும் குளம் குட்டை எல்லாம் ஆக்கிரமிப்பு ஆகி ,,வீழும் மழை எல்லாம் கடலிலில் வீழ்ந்து அரசியல் பேச நதி ..காவிரி இப்படி பேசி பேசி தமிழன் இல்லாமல் போகும் வரை பேசி எல்லாம் நான்கு புறமும் அடைக்க பட்டு - மீனும் இல்லாமல் - நீரும் இல்லாமல் ...வேலை செய்வதற்கு அண்டை மாநிலமும் இல்லாமல் -வான்வழி இறக்குமதி மட்டும் - ரேசன் கடை சாரய கடை மட்டும் திறந்து இருக்கும் எல்லாம் இங்குவந்து இறங்கும் .... அமைச்சர்கள் அதிகாரிகள் குனிந்து குனிந்து - யோசிக்காமல் - இறகுமதி செய்வார்கள்- ஒரு அண்ணா வளைவு சும்மா அல்வா கொடுக்க பலமுறை MGR சமாதியை வடிமைத்து எதோ நடக்குது தமிழகத்தில் அது பாலை நிலம் நோக்கி செல்வது போல தெரிகிறது -யாராவது மெல்ல நிமிர்ந்து யோசித்து தமிழகத்தை காப்பார்கள் ??? ஓட்டுபோட காசு வாங்கி யோசிக்காமல் தவறு செய்தால் - இறகுமதி ஆட்சிதான் - கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள் வெள்ளம் வரும் வரட்சி வரும் ,,,பறந்து வந்து பார்த்து நிவாரணம் தருவார்கள் வெள்ளம் குளத்தில் அடங்கினால் நீர் பெருகும் வெள்ளம் இல்லாமல் போகும் என்பது பறப்பவர்களுக்கும் குனிவோர்ருக்கும் புரியாமல் போனது -

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.