கர்நாடகா துணை முதல்வர் வீடு, அலுவலகங்களில், "ரெய்டு' : 1.9 கிலோ தங்கம், 37 கிலோ வெள்ளி பறிமுதல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பெங்களூரு ;வருமானத்துக்கு அதிகமாக, சொத்து குவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட, கர்நாடகா துணை முதல்வர் ஈஸ்வரப்பாவின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில், நேற்று லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது, 10 லட்சம் ரூபாய் ரொக்கம், 1.9 கிலோ தங்கம், 37 கிலோ வெள்ளி மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கர்நாடகா துணை முதல்வரும், வருவாய் துறை அமைச்சரும், மாநில பா.ஜ., தலைவருமான ஈஸ்வரப்பா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, ஷிமோகா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வினோத், லோக் ஆயுக்தா சிறப்பு கோர்ட்டில் புகார் செய்திருந்தார்.இந்த புகாரில், ஈஸ்வரப்பா மனைவி ஜெயலட்சுமி, அவரது மகன் காந்தேஷ், மருமகள் ஷாலினி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.இது குறித்து விசாரணை நடத்திய லோக் ஆயுக்தா கோர்ட், அறிக்கை தாக்கல் செய்யும்படி, லோக் ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டது. நடவடிக்கை மேற்கொண்ட, லோக் ஆயுக்தாவினர், ஷிமோகா, பெங்களூரு உட்பட பல இடங்களில், ஈஸ்வரப்பாவின் சொத்து விவரங்களை கண்டறிந்தனர்.ஈஸ்வரப்பா உட்பட, நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன் ஜாமின் கோரி அனைவரும், லோக் ஆயுக்தா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு நிலுவையில் உள்ளது.இந்நிலையில், லோக் ஆயுக்தா போலீசின், 70 பேர் அடங்கிய, 10 குழுவினர், நேற்று, ஈஸ்வரப்பா மற்றும் அவரது குடும்பத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். ஷிமோகா, குண்டப்பா ஷெட் பகுதியிலுள்ள ஈஸ்வரப்பா வீடு, பேஸ் கல்லூரி, டிராக்டர் ஷோ ரூம், இரண்டு முத்திரை தாள் விற்பனையாளர் அலுவலகங்கள், பெங்களூரு வசந்த நகர் சக்கரவர்த்தி லே அவுட்டிலுள்ள வீடு உட்பட, எட்டு இடங்களில் சோதனை நடைபெற்றது.சோதனை குறித்து, கர்நாடக லோக் ஆயுக்தா, ஏ.டி.ஜி.பி., சத்யநாராயணா கூறுகையில், ""லோக் ஆயுக்தா, எஸ்.பி., லிங்க ரெட்டி தலைமையில், 70 லோக் ஆயுக்தா அதிகாரிகள், ஷிமோகா, பெங்களூரு உட்பட, எட்டு இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 10 லட்சம் ரூபாய் ரொக்கம், 1.9 கிலோ தங்கம், 37 கிலோ வெள்ளி மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; ஆவணங்கள் பரிசீலனையில் உள்ளன. பரிசீலனை முடிந்த பின், அது குறித்த விவரம் தெரிவிக்கப்படும்,'' என்றார்.சோதனை தொடர்பாக, கொப்பாலில் நிருபர்களிடம் ஈஸ்வரப்பா கூறியதாவது:லோக் ஆயுக்தா சோதனையை வரவேற்கிறேன். ஏற்கனவே, எதிர்பார்த்திருந்தேன். வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை சேர்த்துள்ளேன் என்று கூறுவது, பொய் குற்றச்சாட்டு. லோக் ஆயுக்தா விசாரணை முடிவடைந்த பின், நான், யார் என்பது உலகிற்கு தெரிய வரும்.லோக் ஆயுக்தா விசாரணையில், உண்மை வெளிவரும். பா.ஜ., தலைவர்கள், ஊழலில் ஈடுபட்டுள்ளதாக, காங்கிரசார் கூறி வருவது, உண்மைக்கு புறம்பானது.இவ்வாறு, ஈஸ்வரப்பா கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சித்தப்பா புலிப்பாண்டி - ஹரேன் பாண்டியாவின் ஆவி ,இந்தியா
25-டிச-201218:48:47 IST Report Abuse
சித்தப்பா புலிப்பாண்டி இது காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட சதி என்று பாஜகவினர் கூவுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Rajam Krishnamoorthy - Mumbai,இந்தியா
25-டிச-201205:54:07 IST Report Abuse
Rajam Krishnamoorthy Thtee different between Congress Govt., and BJP Govt., why there is no search in Congress Leaders house, like Chithambaram's house and Congress govt ruling states. Why there is no action against 24 ministries who criminal background in UP.
Rate this:
Share this comment
Cancel
Bava Husain - riyad,சவுதி அரேபியா
25-டிச-201201:39:12 IST Report Abuse
Bava Husain "தீர்ப்பு" மக்கள் கையில்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்