புதுடில்லி; சங்கீத நாடக அகடமி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இசையமைப்பாளர் இளையராஜா, கடம் வாத்ய கலைஞர் விநாயக் ராம், இசைப் பாடகர் ஓ.எஸ்.தியாகராஜன், மிருதங்க கலைஞர் பிரசாத் ஆகியோர் விருது பெற தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.இயல், இசை, நாடகத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு, ஆண்டுதோறும், சங்கீத நாடக அகடமி விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், சங்கீத நாடக அகடமியின், பொதுக் குழுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், இந்தாண்டு அகடமியின் விருதுக்கு, நாடு முழுவதிலும் இருந்து, 36 கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.திரை இசையில் புதுமையைப் புகுத்தி, சாதனை படைத்ததற்காக, பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, சங்கீத நாடக அகடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.மேலும், விருது பெறுபவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த, டி.எச்.விநாயக் ராம் - கடம், கே.பி.பிரசாத் - மிருதங்கம், ஓ.எஸ்.தியாகராஜன் - வாய் பாட்டு, புரிசை கண்ணப்பா சம்பந்தன் - நடிப்பு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.விருது பெறும் கலைஞர்களுக்கு, அகடமி சார்பில், ஒரு லட்சம் ரூபாய் பரிசும், தாமிரபத்திரமும், அங்கவஸ்திரமும் வழங்கப்படும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.