புதுடில்லி: கற்பழிப்பு உள்ளிட்ட கொடூர சம்பவங்களில் இருந்து பெண்களை பாதுகாக்க கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும் என அன்னா ஹசாரே, பிரதமருக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு , சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எழுதிய கடிதம், கற்பழிப்பு உள்ளிட்ட பாதக செயல்களை செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக தூக்குதண்டனை விதிக்க வேண்டும். டில்லியில் நடந்துவரும் சம்பவங்களை பார்த்தால் இளைஞர்கள், மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்து பெண்களை பாதுகாக்க கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும். நாடு சுதந்திரமடைந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் இது போன்ற குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக இல்லை. தற்போதைய சூழ்நிலையில் அரசின் தலையாய கடமை அது தான். இவ்வாறு ஹசாரே கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.