Thirupavai and Thiruvempavai | மார்கழி வழிபாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மார்கழி வழிபாடு

Added : டிச 24, 2012
Advertisement
மார்கழி வழிபாடு

மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் உங்கள் இனிய குரலில் பாடி மகிழுங்கள்.
திருப்பாவை
பாடல் - 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகருணனும்தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!தோற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
பொருள்: முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக் கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவாவது செய்யேன்! நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணனை தூக்கத்திற்கு உதாரணமாக சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திற.

திருவெம்பாவை
பாடல் - 10
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவேபேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்ஓத<உலவா ஒரு தோழன் தொண்டர் உளன்கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
பொருள்: நற்பண்புள்ள குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்களுமான பெண்களே! நம் சிவனின் திருப்பாதங்கள் ஏழு பாதாள லோகங்களையும் கடந்தும், திருமுடி வானத்தைக் கடந்தும் இருக்கிறது. தேவியை, மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒருவனல்ல என்பது நிஜமாகிறது. வேதங்களும், விண்ணவரும், பூலோகத்தினரும் சேர்ந்து துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது. யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன். அவனது ஊர், பெயர், <உறவினர் பற்றி ஏதும் தெரியவில்லை. அவனை அறிந்து கொள்ள முடியவில்லை.....

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை