நியூயார்க்:அமெரிக்காவில், தீயணைக்க வந்த வீரர்கள் இருவர், சுட்டுக் கொல்லப்பட்டனர். அமெரிக்காவில், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சர்வசாதாரணமாகி விட்டன. கடந்த வாரம், ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, நேற்று, நியூயார்க்கின், வெப்ஸ்டர் பகுதியில், இன்ஜின் கம்பெனி ஒன்றும், அங்குள்ள வாகனங்களும், தீப்பற்றி எரிவதாகத் தகவல் வந்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து, தீயை அணைக்கத் துவங்கினர்.தீயை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த தீயணைப்பு வீரர்களை நோக்கி சிலர், திடீரென சுட்டனர். இதில், இரண்டு தீயணைப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர். சில வீரர்கள் காயமடைந்தனர்.துப்பாக்கியால் சுட்ட நபர்கள் தான், அப்பகுதியில், தீ விபத்தை ஏற்படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.