புதுச்சேரி :புதுச்சேரி படைப்பாளியான தங்கப்பா, இரண்டாவது முறையாக இந்தாண்டும், சாகித்ய அகடமி விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தாகூர் கலைக் கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் தங்கப்பா, சங்க காலத் தமிழ்க் கவிதைகளான குறுந்தொகை, ஐங்குறுநூறு, நற்றினை, அகநாநூறு, கலித்தொகை போன்ற அகநூல்களில் இருந்தும், புறநானூறு என்ற நூலில் இருந்தும், சிறந்த பாடல்களைத் தேர்வு செய்து, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, "லவ் ஸ்டாண்ட்ஸ் அலூன்' என்ற நூலை, 2010 ஆண்டு, பெங்குவின் இந்தியா நிறுவனம் சார்பில் வெளியிட்டார். தமிழுக்குப் பெருமை சேர்க்கும் இந்நூல், இந்தாண்டு (2012) சாகித்ய அகடமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இது, தமிழ் மொழிக்கும், இலக்கிய உலகிற்கும், பெருமை சேர்த்துள்ளது.தங்கப்பா எழுதிய கவிதை நூலான, "சோலை கொல்லை பொம்மை' என்ற குழந்தை இலக்கிய நூலுக்கு, சாகித்ய அகடமி விருது, 2011ம் ஆண்டு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாவது முறையாக, சாகித்திய அகடமியின் விருதினைப் பெற்ற தங்கப்பாவுக்குத் தமிழக மற்றும் புதுச்சேரி இலக்கிய ஆர்வலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.