"தானே' புயல் கான்கிரீட் வீடு கட்டும் பணி தீவிரம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கடலூர்:"தானே' புயல் தாக்கி ஓராண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. மேலும் "தானே' புயலால் புரட்டிப்போட்ட குடிசை வாசிகளுக்கு "கான்கிரீட்' வீடு கட்டும் பணியை விரைந்து முடிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது.கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி வீசிய "தானே' புயலில் கடலூர் மாவட்டத்தில் இருந்த குடிசைகள் காணாமல் போயின. காற்றின் கோரத்தாண்டவத்தில் வீடுகளை இழந்த மக்கள் நிர்கதியாய் நின்றனர். நிலம், வீடு பாதித்தவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டார்.அதன்படி பயிர், பொருட்களை இழந்தவர்களுக்கு இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் வீடே இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுப்பதற்காக ஒரு லட்சம் வீடுகளை ஒதுக்கி சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி புயல் பாதித்த கடலூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் வீடுகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் வீடுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.பயனாளிகள் கவலைஒரு லட்சம் ரூபாயில் 200 சதுர அடிபரப்பில் வீடு கட்டிக் கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஏற்கனவே இந்திரா குடியிருப்புத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகையே "தானே' புயல் வீட்டிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய விலைவாசி, கூலி உயர்வு உள்ள நிலையில் இந்த தொகையில் வீடு கட்டமுடியுமா என பயனாளிகள் கவலையில் இருந்தனர்.இதற்கிடையே நீலம் புயல், மழை, என மாதங்கள் தள்ளிக்கொண்டே சென்றன.

ஆனால் வீடுகள் கட்டுமானப் பணி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.கலெக்டர் தீவிரம்
"தானே' புயல் தாக்கி ஓராண்டு நிறைவடைய உள் ளது. ஆனால் வீடுகள் கட்டுமானப் பணிகள் நடைபெறாதது கண்டு புதிய கலெக்டர் கிர்லோஷ்கர் அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளார்.இதுவரை மெத்தனமாக இருந்து வந்த கட்டுமானப்பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, குமராட்சி ஒன்றியங்களில் அதிகளவு குடிசைகள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரைந்து முடிக்க அரசு முழுவீச்சில் இறங்கியுள்ளது. வீடுகளை பயனாளிகளே கட்டிக்கொண்டாலும் அவற்றை கண்காணிக்க புதிய பணியாளர்கள் நியமிக்க உத்தரவிட்டுள்ளது.சிமென்ட், கம்பிகள் கொள்முதல்அதன்படி 8 உதவி செயற் பொறியாளர்கள், 13 பி.டி.ஓ.,க் கள், 26 பொறியாளர்கள், 180 டெக்னிக்கல் உதவியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அதேப்போன்று இம்மாவட்டத்திற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிமென்ட் மூட்டைகள், 1,000 டன்னுக்குமேல் இரும்பு கம்பிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வீடும் அரசு திட்டமிட்டுள்ள 200 சதுர அடியில் வீடு கட்டப்பட வேண்டும். இதற்காக 155 கிலோ இரும்பு கம்பி, 60 மூட்டை சிமென்ட், கட்டுமானச் செலவு 20 ஆயிரம் ரூபாய் அரசு வழங்குகிறது.4 தவணையில் பணம் பட்டுவாடா"தானே' புயல் வீடுகள் கட்டுவது குறித்து கடலூர் மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன் கூறுகையில், "தானே' புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பயனாளிகள் தாங்களாகவே அருகில் இருந்து கட்டிக் கொண்டால் இந்த தொகை போதுமானதாக இருக்கும். 200 சதுர அடியில் தான் வீடு கட்ட வேண்டும்.வீடு கட்டும் பணியில் அளந்து கடைக்கால் தோண்டினாலே உடனடியாக சிமென்ட் மூட்டை கொடுத்து விடுகிறோம். கடலூர் மாவட்டத்தில் உள்ள மண் தரத்திற்கு இரண்டு அடி கடைக்கால் தோண்டினாலே போதுமானது. வீடு கட்டும் போது 4 கட்டமாக பணம் பட்டுவாடா செய்யப்படும்' என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்