Advertisement
முதல்வரை சந்தித்தார் தா.பாண்டியன்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2012,00:24 IST

சென்னை: மின் வெட்டு பிரச்னை மற்றும் விவசாயிகள் தற்கொலை தெடார்பாக, முதல்வர் ஜெயலலிதாவை, இ.கம்யூ., மாநில செயலர், தா. பாண்டியன் சந்தித்து பேசினார். இ.கம்யூ., மாநில செயலர், தா.பாண்டியன், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேருடன், தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது. சந்திப்புக்குப் பின், தா.பாண்டியன் கூறியதாவது: தொகுதி பிரச்னைகள் தொடர்பாக, எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வரை சந்தித்தோம். மின் வெட்டு, விவசாயிகள் தற்கொலை தொடர்பாக முதல்வரிடம் பேசினோம். அப்போது, மின்வெட்டு விஷயத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக, சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், "அடுத்தாண்டு ஜூன் மாதம் முதல், மின்வெட்டு குறையும் என்றும், இறுதியில் மின்வெட்டு அறவே நீக்கப்படும்' என முதல்வர் தெரிவித்தார். டெல்டா மாவட்டத்தில், ஒன்பது விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து பேசினேன். அதற்கு, "பயிர் கருகியதால் இரண்டு விவசாயிகள் மட்டுமே உயிரிழந்துள்ளதாக, அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, அம்மாவட்ட மக்களுக்கு பல திட்டங்கள் அறிவித்துள்ளேன்' என, முதல்வர் தெரிவித்தார். இவ்வாறு, அவர் கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (4)
S. ரெகுநாதன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-டிச-201211:13:51 IST Report Abuse
S. ரெகுநாதன் பிழைக்க தெரிந்த வழி...தா. பாண்டியன் முதிர்ந்த அரசியல் வாதி...இந்த பாணியை விஜயகாந்த் கடைப்பிடித்திருந்தால் பாராளுமன்றத்தில் தேமுதிக்கவுக்கு 2 சீட் தேறியிருக்கும்...ஐயோ ஐயோ...
Rate this:
3 members
0 members
5 members
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
25-டிச-201209:23:46 IST Report Abuse
Pannadai Pandian விவசாயிகளை பற்றி நன்கு அறிந்தவர் தா.பாண்டியன். அவர் விவசாயிகளின் நிலைமையை பெர்சனலாக எடுத்துரைக்க முதல்வர் வீடு தேடி சென்றது மகிழ்ச்சி. விவசாயிகளின் உயிர்களை தலைவர் மாதிரி தூண்டி தற்கொலை முயற்சியின் மூலம் அரசியல் வியாபாரம் செய்யாமல் இருப்பது இவர் அரசியலில் தரம் தாழ்ந்தவர் இல்லை என்பதை காட்டுகிறது.
Rate this:
4 members
0 members
8 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-டிச-201202:42:34 IST Report Abuse
தமிழவேல் // மின் வெட்டு, விவசாயிகள் தற்கொலை தொடர்பாக முதல்வரிடம் பேசினோம். அப்போது, மின்வெட்டு விஷயத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக, சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளதாக தெரிவித்தார். // அதானே ? சட்டசபையில்தான் சொல்லிட்டாரே ? அவர ஏன் போயி தொந்தரவு பண்றீங்க ?
Rate this:
5 members
0 members
8 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-டிச-201202:41:22 IST Report Abuse
தமிழவேல் // தொகுதி பிரச்னைகள் தொடர்பாக, எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வரை சந்தித்தோம். // இது என்ன புதுசா இருக்குது... ? தொகுதி பிரச்னைக்கு நேரா அம்மாவ பாக்குறாங்க .... குடுத்து வச்சவுங்க நீங்க அதுவும் எட்டுபேருக்கு அரை மணிநேரத்திலேயே பிரச்சனை தீந்து போய்டுது....ஆனா இவங்களுக்கு முன்பே எதிர்க்கட்சி தலைவர் கட்சி பிரச்சனையா பாக்கனும்னு சொன்னாரே ... அது இன்னும் நிலுவையில் தானா ?
Rate this:
6 members
0 members
7 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.