விருத்தாசலம்: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பஸ் நிலையத்தில், நேற்று இரவு, 9:00 மணிக்கு, இளம்பெண் ஒருவர் அழுதபடி வந்து கொண்டிருந்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவரிடம் விசாரணை செய்தனர். இரவு, 8:00 மணிக்கு, தனது உறவினரான காதலனுடன், மணிமுக்தாற்றில் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த, நான்கு பேர், தன்னிடம் இருந்த துப்பட்டாவால், தனது காதலனை கட்டிப்போட்டு, தன்னை கற்பழித்ததாகக் கூறினார்.தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று, அப்பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். டி.எஸ்.பி., வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சீராளன் விசாரணை நடத்தினர்.அதனைத் தொடர்ந்து, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின், மேல் சிகிச்சைக்காக, கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நண்பர்களே, கொஞ்சம் கவனியுங்கள் - தினம் படிக்கும், பார்க்கும், கேள்விப்படும் செய்தி மற்றும் செயல்களால், சமூகத்தின் மீதும் அரசு மீதும் அண்டை வீட்டார் மீதும் நம்பிக்கை அற்ற ஒரு நிலையை இன்றைய கட்டமைப்பு நமக்கு மனதில் ஏற்படுதுகிறது. கிடைத்ததை உண்டு, கிடைத்ததை அனுபவித்து, கிடைத்ததில் சுகம் பெற்று வாழும் நிலையை உருவாக்கியது இன்றைய உலகமயம். ஒவ்வொன்றும் கிடைக்க வேண்டிய வயதில் தான் கிடைக்க வேண்டும், தெரிய வேண்டும். நீ 15 வயதில் பெண் அல்லது ஆண் உறவாடி 28 வயதில் எதுவும் மிச்சமில்லை எனில் உனக்கு வாழ்கை இனிக்குமா? சின்ன மல்லையா (kingfisher ) தீபிகா முத்தம் (live with cricket ) கேமரக்காரன் வேறு பக்கம் திரும்புவதில்லை . இதை பார்க்கும் பொடிபயன்கள் அவனுடைய வாய்ப்புக்கு காத்திருக்கிறான். கிடைக்காதபோது மாற்று வழி. பணம் படைத்தவன் எல்லா சுகமும் வரைமுறைஇன்றி சட்ட விரோதமாக கூட அனுபவிக்கும்போது, பணம் இல்லாதவன் மட்டுமல்ல மேற்படி அனுபவித்தவனும் புதிய வாய்ப்பை உருவாக்குகிறான்............. இது மாற்ற முடியாததல்ல, மிகப்பெரிய பிரயாணங்கள் ஆரம்பிப்பது முதலில் ஒரு அடி எடுத்து வைப்பதில் தான். ......
சகோதரி நமது கலாச்சாரம் வேகமாக மறைந்து மேற்கத்திய கலாச்சாரம் பரவுகிறது , இது கொடிய விஷம் , சகோதரி நீங்கள் சாதாரண எல்லைபுரத்தில் இருக்குறீர்கள் , முக்கிய நகரங்களில் ஏற்படும் இத்தகையதுக்கு அரசியல்வாதிகள் முக்கியத்துவம் கொடுப்பார்கள் அரசியலாக்க , மற்றும் நமது பகுதியில் பணம் வாங்கி வாக்களித்தால் நமது பகுதி அரசியல் வியாபாரி ஆதாயம் இருந்தால் எட்டிபார்பார் இல்லையில் ?, ஆகையால் நம்மை நாமே பாதுகாக்க முற்படுவோம் ...
அன்பான அரசுக்கு ஒரு வேண்டுகோள் இந்த காதல் என்ற வார்த்தையை நீக்கி நட்பு, அன்புடன் பழகுகிறோம் என்று சட்டம் இயற்றுங்கள் "காதல்" காதல்" "காதல்" இந்த வார்த்தையை அனைவரும் உச்சரிக்கப் படாது என்று ஒட்டு மொத்த மக்களும், சினிமா, சின்னத்திரை, பத்திர்க்கைகள், அனைத்து பத்திரிக்கைகளும் தான், மற்றும் ஊடகங்கள், தொலைகாட்சி இப்படி அனைவரும் அரசுக்கு எழுதி இந்த காதல் என்ற வார்த்தையை நீக்கி நட்பு தான் பயன் படுத்தனும் என்று அரசுக்கு சட்டம் ஒன்று இயற்ற சொல்லுங்கள்
சட்டம் எல்லாம் சும்மா தான் இருக்கு . கடுமைய தண்டணைய பப்ளிக்கா கொடுத்த இந்த மாதிரி தப்பு ஏன் நடக்க போகுது இத மாதிரி ஆளுங்கல புடிச்ச உடனேயே கொஞ்சம் கொஞ்சமா சித்தரவத தண்டணைய கொடுக்கணும் ... முதல KUDIYA NIRUTHANUM (WINE SHOPS) மூடநும் ஏன் குடி இல்லாம இருக்க முடியாத பல பிரச்னை அதுல இருந்து தன் ஆரம்பம் ஆகுது ... நாங்கள் கொடுக்கும் கருத்துக்கள் வெறும் கருத்துகள மட்டும் தான் இருக்க போகுது ... முடிவாக தண்டனைகள் அதிகமானால் தவறுகள் குறையும் ..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.