சென்னை: ஐந்தாண்டு திட்ட ஒப்புதலுக்காக நடக்கும், தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள, முதல்வர் ஜெயலலிதா, 27ம் தேதி டில்லி செல்கிறார். நாட்டில் தற்போது, 11வது ஐந்தாண்டுத் திட்டம் முடிவடைந்து, 12வது ஐந்தாண்டு திட்டப்பணிகள் துவங்க உள்ளன. தேசிய வளர்ச்சிக் குழுவில், மாநிலங்கள் சார்பில், திட்டங்களை சமர்ப்பித்து, அதற்கான ஒப்புதலை பெற வேண்டும். தமிழகம் சார்பில், கடந்த சில மாதங்களுக்கு முன், முதல்வர் ஜெயலலிதா டில்லி சென்று, திட்டக்கமிஷன் துணைத் தலைவர், மாண்டேக் சிங் அலுவாலியாவை சந்தித்தார். அப்போது, 12வது ஐந்தாண்டு திட்டத்தில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய, 28 ஆயிரம் கோடி ரூபாய் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார். அதன் பின், ஒவ்வொரு துறை சார்பிலும், அதிகாரிகள் டில்லி சென்று, திட்டக்கமிஷன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி திரும்பினர். இந்நிலையில், 12ம் ஐந்தாண்டு திட்டத்திற்கான ஒப்புதலை வழங்கும், தேசிய வளர்ச்சிக் குழு கூட்டம், நாளை மறுநாள், டில்லி விஞ்ஞான பவனில் நடக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நடக்கும் இக்கூட்டத்தில், அனைத்து மாநில முதல்வர்கள், தலைமைச் செயலர்கள், போலீஸ் டி.ஜி.பி.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழகம் சார்பில், முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலர் தேபேந்திர நாத் சாரங்கி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதற்காக, முதல்வர் ஜெயலலிதா, 27ம் தேதி டில்லி செல்கிறார். முன்னதாக, நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில்,முதல்வர், 26ம் தேதி கலந்து கொண்டு, அன்றே, தமிழகம் திரும்புகிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.