சென்னை: "ஜாதி கட்சியாக உள்ள, பா.ம.க.,வின் தேர்தல் கமிஷன் அங்கீகாரத்தை, ரத்து செய்ய வேண்டும்' என, மக்கள் தேசம் - பறையர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, பேரவையின் தலைவர் பாக்யராஜ் கூறியதவாது: வன்னியர் சங்கத்தை உருவாக்கி, பின், பாட்டாளி மக்கள் கட்சியை துவங்கிய ராமதாஸ், அப்போதிருந்தே, ஆதி திராவிட மக்கள் மீது, தாக்குதல் நடத்த, வன்னிய மக்களை ஏவிவிட்டு வருகிறார். தற்போது, "காதல்' என்ற பெயரில், ஆதி திராவிட மக்களையும், அவர்களின் சொத்துக்களையும் சூறையாடுகின்றனர். "அரசியல் கட்சிகள், ஜாதிய கட்சிகளாக மாறினால், அவற்றின் கட்சி அங்கீகாரத்தை, தேர்தல் கமிஷன் ரத்து செய்ய வேண்டும்' என, ராமதாஸ் வலியுறுத்தி வந்தார். அவரது கட்சியான, பா.ம.க., ஜாதி கட்சியாக உள்ளதால், அதன் அரசியல் அங்கீகாரத்தை, தேர்தல் கமிஷன் ரத்து செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் அல்லாதோர் பாதுகாப்பு பேரவை நடத்தும் மாநாட்டை, தமிழக அரசு தடை செய்ய வேண்டும். ஆதி திராவிடர் மீது, தாக்குதல் நடத்தும், பா.ம.க.,வினரை கண்டிக்காமல், அவர்களோடு உறவு கொண்டு அரசியல் நடத்த, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் செயல்படுகிறார். எனவே, ஆதி திராவிட மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நீடிப்பதை, மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு, பாக்கியராஜ் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.