கோவை :"இருகூரில்
இருந்து திருச்சி ரோட்டுக்கு சர்வீஸ் ரோடு அமைக்காமல், ரயில்வே மேம்பால
பணி துவங்குவதால், போக்குவரத்து இடையூறு அதிகரிக்கும்; குறைந்தபட்சம்
டூவீலர், கார் செல்லும் வசதியாவது ஏற்படுத்தி தர வேண்டும்' என, பொதுமக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருகூர் - பீளமேடு இடையே ரயில்வே மேம்பால
கட்டுமானப் பணி நாளை (26ம் தேதி) துவங்குகிறது. எனவே, இவ்வழியாக நாளை முதல்
வாகன போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக, இருகூர் பொதுமக்கள்
ஒண்டிப்புதூர் மற்றும் கோவை சென்று வர, ஒண்டிப்புதூர் எஸ்.ஐ.எச். எஸ்.,
காலனி சாலையையும், எல் அண்ட் டி புறவழிச்சாலையையும் போக்குவரத்துக்கு
பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆனால்,
இப்பகுதியில் பொதுமக்கள் சென்று வர வசதியாக, சர்வீஸ் ரோடு அமைக்காமல்
ரயில்வே மேம்பாலம் அமைப்பதால், போக்குவரத்து இடையூறு இன்னும் அதிகரிக்கும்
என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று
நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமில், "இருகூர் ஊர்நல ஒருங்கிணைப்பு
குழு' சார்பில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலெக்டர் கருணாகரனை
சந்தித்து, இப்பிரச்னை குறித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.
ஒருங்கிணைப்புக் குழு தலைவர் முருகேசன் கூறியதாவது:
இருகூர்
பேரூராட்சி பகுதியில் 11 வார்டுகளில் 30 ஆயிரம் மக்கள் உள்ளனர். இங்கு
ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி துவங்கும் நிலையிலும், சர்வீஸ் ரோடு
அமைக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய ரோடு வசதியின்றி
பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலம்பூர் பைபாஸ் ரோடு வழியாக 5 கி.மீ., சுற்றி ஊருக்குள் வர வேண்டிய நிலை
உள்ளது.
இருகூர் - பீளமேடு மேம்பால பணி துவங்கும் முன், எஸ்.ஐ.எச்.எஸ்.,
காலனி வழியாக, இருகூர் சென்றடைய தார் ரோடு அமைக்க வேண்டும். குறைந்தபட்சம்
இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வசதியாவது செய்து தர வேண்டும்.
சர்வீஸ் ரோடு அமைத்த பின், கட்டுமானப் பணியை துவங்குவதே சிறந்தது.
இவ்வாறு, முருகேசன் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.