சென்னை: வருமானத்துக்கு அதிகமாக, 1.70 கோடி ரூபாய் அளவுக்கு, சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து, சென்னை, சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. தமிழக அமைச்சரவையில், சமூக நலத் துறை அமைச்சராக இருப்பவர், வளர்மதி. 2001-06ம் ஆண்டு, கால கட்டத்திலும், சமூக நலத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக, 1.70 கோடி ரூபாய் அளவுக்கு, சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறையினர், 2007ம் ஆண்டு, வழக்குத் தொடுத்தனர். தி.மு.க., ஆட்சியில், வளர்மதி, அவரது கணவர் பாலசுப்ரமணியன், மகன்கள் முத்தமிழன், மூவேந்தன் ஆகியோர் மீது, வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு, ஐகோர்ட் வளாகத்தில் உள்ள, ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில், நிலுவையில் இருந்தது. வழக்கில் இருந்து, விடுவிக்கக் கோரி, வளர்மதி உள்ளிட்ட நால்வரும், மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களில், "அரசியல் உள்நோக்கம் கொண்டு, இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. பழிவாங்கும் விதத்தில், வழக்குத் தொடரப்பட்டு உள்ளது. வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது. மனுக்களை, விசாரித்த நீதிபதி விஜயலட்சுமி, வழக்கில் இருந்து, வளர்மதி உள்ளிட்ட நால்வரையும் விடுவித்து உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அரசியல் உள்நோக்கம் கொண்டு, இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. பழிவாங்கும் விதத்தில், வழக்குத் தொடரப்பட்டு உள்ளது.என தீர்ப்பளிக்கப்ப்ட்டிருந்தால் இந்த வழக்கைத் தொடர்ந்த அதிகாரிகள், தொடரசொன்ன ஆட்சித் தலைமை ஆகியோர் மீது நடவடிக்கை தேவை. வழக்கு செலவை அவர்களிடமிருந்து வட்டி அபராதத்துடன் வசூலிக்கலாமே.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.