E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அரசு பள்ளியை ஆக்கிரமிக்கும் சமூக விரோதிகள்:சப்-கலெக்டரிடம் புகார்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 டிச
2012
00:41

பொள்ளாச்சி :பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி ஈஸ்வரன் கோவில் வீதியில் வசித்து வருபவர்கள், அப்பகுதியில் சமூகவிரோதிகள் அத்துமீறி செயல்படுவதாக சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மனுநீதிநாள் முகாமில் புகார் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த புகாரில் தெரிவித்திருப்பதாவது:
நாங்கள் பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி ஈஸ்வரன் கோவில் வீதியில் வசித்து வருகிறோம். இவ்வீதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
அங்கு இரவு நேரத்தில் வரும் சில சமூகவிரோதிகள், பள்ளியை முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்கின்றனர்.
அங்கு சீட்டு விளையாடு
வதும், மது அருந்துவதும், போதை மருந்துகளை பயன்படுத்துவதுமாக இருக்கின்றனர்.
இதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பொது இடத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தால் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இதே நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றனர்.
இது தவிர, இப்பகுதியிலுள்ள தனியார் பள்ளி அருகே டியூசன் சென்டர்கள் செயல்படு
கின்றன.
அங்கு படிக்க மாலை நேரங்களில் வரும் மாணவியரை சில்மிஷம் செய்வதும்,மொபைலில் போட்டோ எடுக்கின்றனர்.
இது குறித்து, போலீசாரிடம் ஏழாவது வார்டு கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் நேரடியாக சென்று புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் சப்-கலெக்டர் இப்பிரச்னையில் தலையீடு செய்து தீர்வு காணவேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
புகாரின் பேரில் போலீசாரை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவதாக சப்-கலெக்டர் (பொறுப்பு) குணசேகரன் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


வைணவ கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு: "கோவிந்தா' கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

- நமது நிருபர் குழு -
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளிலுள்ள வைணவ கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, பக்தர்களின் "கோவிந்தா' கோஷத்துடன் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளிலுள்ள வைணவ கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பொள்ளாச்சி கடை
வீதியிலுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 2.00 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சன அபிஷேக பூஜை துவங்கியது. காலை 4.00 மணிக்கு சொர்க்கவாசலுக்கு நிலவு பூஜை நடந்தது.
தொடர்ந்து, பக்தர்கள் அளித்த காய்கறிகள் மற்றும் பழங்கள், மளிகை பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட சொர்க்கவாசல் காலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது, பக்தர்கள் "கோவிந்தா' கோஷம் எழுப்பினர். காலை 5.30 மணிக்கு பெருமாளுக்கு தீபாராதனையும், மஹா அபிஷேகமும் நடந்தது. அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
காலை 10.30 மணிக்கு வைகுண்டநாதர் அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள் வெங்கட்ரமணன் வீதி, கடைவீதி, பாலகோபாலபுரம் மற்றும் பல்லடம் ரோடு வழியாக திருவீதி உலா வந்து கோவிலை சென்றடைந்தார். மாலை 6.00 மணிக்கு "ராப்பத்து' உற்சவத்தில் நம்மாழ்வாருடன் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக கோவிலை உலா வந்தார். ஏகாதசி விரதமிருந்த பக்தர்கள் நேற்றிரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்தனர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி மூலஸ்தானத்தில் மூலவருக்கு முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டு"முத்தங்கி சேவை' நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இன்றும்
"முத்தங்கி சேவை' நடக்கிறது.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், கோவில் செயல் அலுவலர் வெண்மணி, தக்கார் அனிதா, அர்ச்சகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டிலுள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், நேற்று காலை 5.00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பொள்ளாச்சி அடுத்த ஜமீன்ஊத்துக்குளி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், காலை 5.00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. சுற்றுப்பகுதிகளிலுள்ள பிற வைணவ கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.
உடுமலை
உடுமலை நெல்லுக்கடை வீதி சவுந்தரவல்லித்தாயார் சமேத சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு அபிஷேக பூஜை நடந்தது. அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா' கோஷம் முழங்க சொர்க்கவாசல் வழியாக நுழைந்து சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட உற்சவர், கருடாழ்வாரை தரிசனம் செய்தனர்.
பின்னர், காலை 6.30 மணிக்கு புதிய மண்டபத்தில், சுவாமி சேவை நடந்தது. காலை 11.30 மணிக்கு திருவீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. மாலை 6.30 மணிக்கு உற்சவர் ஏகாதசி திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது.
பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள சவுரிராஜப்பெருமாள் சன்னதியில், அதிகாலை 3.30 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. கொழுமம் கல்யாண வரதராஜப்பெருமாள் கோவிலில், அதிகாலை 3:30 அபிஷேகமும், தீபாராதனை காலை 6:00 மணிக்கும், சொர்க்க வாசல் திறப்பு காலை 7:00மணிக்கும், காலை 8:00 மணிக்கு திருவீதியுலா நிகழ்ச்சியும் நடந்தன.


மருந்து வழங்க போதிய ஊழியர்கள் இல்லை:நோயாளிகள் தவிப்பு

பொள்ளாச்சி :
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் இடத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால், நீண்ட நேரம் மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், நோயாளிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் அரசு மருத்துவமனை உள்ளது. மாவட்டத்தின், தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டும் போதிய அடிப்படை வசதிகள், டாக்டர்கள், ஊழியர்கள் இல்லாத நிலை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு, தினமும் 1,500க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
வெளிப்புற நோயாளிகளுக்காக, மருத்துவமனையில் இலவசமாக மருந்துகள் வழங்கப்படுகின்றன. சிகிச்சை பெறும் நோயாளிகள், டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி மருந்து வாங்க அமைக்கப்பட்டுள்ள கவுன்ட்டருக்கு வருகின்றனர். அங்கு நான்கு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு இரண்டு ஊழியர்கள் மட்டுமே தொடர் பணியில் இருக்கின்றனர்.
அனைத்து வெளி நோயாளிகளுக்கும், இந்த ஊழியர்கள் மட்டுமே மருந்து வழங்க வேண்டியுள்ளதால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. காலை 8.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை மருந்து வாங்க நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.
நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் முறையை எளிமையாக்கும் வகையில், மருத்துவமனை கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊழியர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால், கம்ப்யூட்டர் இயக்க தெரியாமல் விழிக்கின்றனர்.
கம்ப்யூட்டரில் உள்ள பட்டியல்படி மருந்துகளை, தேர்வு செய்து வழங்குவதிலும் தாமதம் செய்வதால் நோயாளிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். "இருக்கும் பணியாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டும். நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் வகையில், போதிய ஊழியர்கள் நியமிக்க வேண்டும்' என, தன்னார்வ அமைப்பினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் இப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு கிடைக்காத நிலை உள்ளது. இந்நிலையில், நேரடியாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை ஊழியர்கள் கூறுகையில், "ஊழியர்கள் பற்றாக்குறை குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில், கூடுதல் பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். தற்போது, இருக்கும் ஊழியர்கள் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.


படம் எடுத்த வாலிபர்களை விரட்டிய யானைகள்: வால்பாறையில் பரபரப்பு

வால்பாறை :
வால்பாறை அருகே, காட்டு
யானையை படம் எடுத்தவர்களை விரட்டியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது சோலையார் எஸ்டேட். இங்குள்ள எலுமிச்சை மரம் தேயிலை தோட்டத்தில், நேற்றுமுன்தினம் காலை ஒரு குட்டியுடன் நான்கு யானைகள் முகாமிட்டன. இப்பகுதியில் வனத்துறையினர் யாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை.
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வாலிபர்கள் சிலர், யானையின் மிக அருகில் நின்று மொபைல்போன் மூலம் போட்டோ எடுக்க துவங்கினர்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த யானைகள் கூட்டம், திடீரென்று படம் எடுக்க முயன்றவர்களை விரட்டத் துவங்கியது. இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தூரத்தில் நின்று யானையை பார்த்தவர்கள், அவர்களை மேலே வரச்சொல்லி கூச்சலிட்டனர்.
இருப்பினும், வாலிபர்கள் யானையை தொடர்ந்து படம் எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். ஒரு வழியாக யானைகளை தாமாகவே அருகில் உள்ள துண்டு சோலைக்கு மறைந்து கொண்டதையடுத்து வாலிபர்கள் அங்கிருந்து "எஸ்கேப்' ஆகினர்.
"அதிகாரி வீட்டை
சேதப்படுத்திய யானைகள்'
வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா(டேன்டீ) லாசன் டிவிஷன். இங்கு குட்டியுடன் வந்த ஒன்பது யானைகள் இங்குள்ள ரேஷன் கடையை இடித்தன.
பின்னர் பீல்டு ஆபீசர் ராமன் என்பவரின் வீட்டின் சுவற்றை இடித்து, உள்ளே இருக்கும் பொருட்களை சேதப்படுத்தின. அப்போது,
வீட்டில் யாரும் இல்லாததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதனிடையே, காட்டுயானைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் அவை வரும் பாதையில் தீயை போட்டு குளிர் காய்ந்தனர்.
ஆனால் யானைகள் அவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு, வேறு
வழியாக எஸ்டேட் குடியிருப்பு
பகுதிக்குள் புகுந்து, வீடு மற்றும் கடைகளை இடித்து சேதப்படுத்தின.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.