திருக்கோவிலூர்:திருக்கோவிலூர், மணம்பூண்டி பாலமணிகண்டன் சுவாமி கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது.திருக்கோவிலூர், மணம்பூண்டி பாலமணிகண்டன் சுவாமி கோவிலில் நேற்று மண்டல பூஜை விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 21ம் தேதி கொடியேற்றம், ஆராட்டு, விளக்கு பூஜையும், நேற்று முன்தினம் 108 சங்கு அபிஷேகம், ஊஞ்சல் சேவை நடந்தது.நேற்று காலை 8 மணிக்கு தென்பெண்ணை ஆற்றங்கரையில் இருந்து கலசம் புறப்பாடாகியது. கோவிலை வந்தடைந்தவுடன் கலச பூஜைகள் துவங்கியது. ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ துர்கா ஹோமம், ஸ்ரீ சாஸ்தா ஹோமம், விசேஷ திரவ்யாகுதி, பூர்ணாஹீதி, ஐயப்பனுக்கு மகா அபிஷேகம், சோடசோபசார தீபாராதனை நடந்தது.இரவு ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.