சங்கராபுரம்:வனப்
பகுதியில் காட்டுப்பன்றி வேட்டையாடிய இருவரிடம் 40 ஆயிரம் அபராதம்
வசூலிக்கப்பட்டது.சங்கராபுரம் அடுத்த விரியூர் வனப்பகுதியில் வனச்சரக
அலுவலர் கொளஞ்சியப்பா மேற்பார் வையில் பாரஸ்டர் சேகர், வனக்காப்பாளர்
சிவக்குமார், தோட்டக் காவலர் திருவேங்கடம் ஆகியோர் ரோந்து சென்றனர்.
அங்கு
விரியூரை சேர்ந்த ஆரோக்யதாஸ் மகன் லூர்துராஜ், அந்தோணி மகன் அகஸ்டின்ராஜ்
ஆகி யோர் காட்டுப்பன்றியை வேட்டையாடி, இறைச்சியை பங்குபோட்டுக்
கொண்டிருந்தனர்.அவர்கள் இருவரையும் கைது செய்து தலா 20 ஆயிரம் ரூபாய்
அபராதம் விதித்து, வனத்துறையினர் வசூலித்தனர்.
எச்சரிக்கை : வன
விலங்குகளை வேட்டையாடுவது தமிழ்நாடு வன விலங்கு சட்டத்தின் படி
குற்றமாகும். இதில் 3 ஆண் டுகள் வரை சிறை தண்டணையும், அபராதமும்
விதிக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் ஜெயபாலன் எச்சரித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.