விழுப்புரம்:தமிழ்நாடு
மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தேசிய மின்சிக்கன வாரவிழா
விழுப்புரத்தில் நடந்தது. விழுப்புரம் நான்கு முனை சிக்னல் அருகிலிருந்து
புறப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தில் மின் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி
மாணவர்கள் பங்கேற்றனர். ஊர்வலத்தை கலெக்டர் சம்பத் துவக்கி வைத்தார்.பின்னர்
ஏ.எஸ்.ஜி., மண்டபத்தில் நடந்த தேசிய மின்சிக்கன வார விழாவிற்கு கலெக்டர்
சம்பத் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், பொதுமக்கள், மாணவர்கள் தங்களின்
வீடுகளில் எலக்ட்ரிக்கல் பல்புக்கு பதிலாக, சிஎப்எல் பல்புகளை பயன்படுத்தி
மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
மின்வினியோக தலைமை
பொறியாளர் மதனமோகன் முன்னிலை வகித்தார்.
மேற்பார்வை பொறியாளர் அசோகன்
வரவேற்றார். மேற்பார்வை பொறியாளர் அப்துல்ரகீம், செயற்பொறியாளர்கள்
ராஜேந்திரன், கிருஷ்ணன், திருநாவுக்கரசு, சீனுவாசன், சோமசுந்தரம் ஆகியோர்
சிறப்புரையாற்றினர்.அதனை தொடர்ந்து மின்சிக்கனம் தலைப்பில் நடந்த கட்டுரை,
பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்
வழங்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.