Advertisement
ரயில் படியில் பயணம் செய்யாதீர்: விழிப்புணர்வு பிரசாரம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2012,00:42 IST

சென்னை: ரயில்களில், படியில் நின்று பயணம் செய்தபோது, தவறி விழுந்து படுகாயமடைந்த,18 பேரில், 16 பேர் ரயில்வே பாதுகாப்பு படையினரின் உதவியால், உயிர் பிழைத்தனர். படியில் நின்று பயணம் செய்வதை தடுக்க, விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. சென்னை புறநகர் மின் ரயில்களில், படிகளில் நின்று பயணம் செய்வோர், தவறி விழுந்து இறப்பது, அடிக்கடி நடந்து வருகிறது. ரயில் பெட்டிகளில் அமர்ந்து பயணம் செய்வதற்கு இடமிருந்தும், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கி பயணம் செய்கின்றனர். இவர்களை பிடிப்பதற்கு, ரயில்வே பாதுகாப்பு படை மூலம், தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாதாரண உடையில் ரயில்வே பாதுகாப்பு படையினர், படியில் தொங்கி பயணம் செய்யும் பயணிகளை பிடித்து, அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த, மூன்று மாதங்களில், ரயில்களில் தொங்கியபடி பயணம் செய்த, 314 பேர் பிடிக்கப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு, தாம்பரம் - பீச் ரயில் நிலையங்கள் இடையே, புறநகர் மின்சார ரயில் நிலையங்களில், பயணம் செய்தபோது, படியில் நின்று பயணம் செய்தவர்களில், 18 பேர் தவறி விழுந்து பலத்த காயமடைந்தனர்; 16 பேர் உயிர் பிழைத்தனர்; இருவர் இறந்தனர். படியில் நின்று பயணம் செய்வதை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு பிரசாரம், ரயில்வே பாதுகாப்பு படை மூலம் செய்யப்படுகிறது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Guru - Batam,இந்தோனேசியா
25-டிச-201207:27:56 IST Report Abuse
Guru படியில் பயணம் செய்வது ஒரு பொருப்பற்ற செயல்.., திருத்துவார்களா இவர்கள்
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Skv - Bangalore,இந்தியா
25-டிச-201204:24:37 IST Report Abuse
Skv எல்லாவேளினாடுகளிலும் ஏலேக்ட்ரிக்ரயில்களில் கதவுகள் இருக்கு கதவுகள் மூடியபிரகெ ரயில்கள் கிளம்பும் இதுலேயும் நம்ம ஊர் கலீல் மாணவ மணிகளுக்கு சாகச புத்தி அதிகம் ஓடும் பஸ் ரயில்களில் ஏறுவது/இறங்குவது விழுந்து அடிபட்டுக்கிறது ஆர் உசிரையே தருவது இதெல்லாம் தான் சாகசம்னு சிறப்ப செய்யுதுங்க. இதெல்லாம் ரஷ் அண்ட் பீக் நேரத்துலேயும் கட்டாயம் கடைபிடிக்கபடனும் , முக்கியமா கதவுகள் கட்டாயம் மூடி திறக்கும்படியாத்தான் இருக்கணும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.