ஊட்டி: "தென் மாநில அளவில், எய்ட்ஸ் நோயை கட்டுக்குள் கொண்டு வருவதில், தமிழகம் முன்னிலை வகிக்கிறது'' என, வாரிய திட்ட இயக்குனர் தெரிவித்தார். தமிழக உணவு பாதுகாப்பு கமிஷனரும், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குனருமான குமார் ஜெயந்த், ஊட்டி தலைமை அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு நடத்தினார். அங்கிருந்த எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு பிரிவு, ரத்த வங்கியை ஆய்வு செய்த அவர், அவற்றின் செயல்பாடுகள் குறித்து திருப்தி தெரிவித்தார். பின், நிருபர்களிடம் குமார் ஜெயந்த் கூறியதாவது: எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு, முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென் மாநில அளவில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு விழிப்புணர்வில், தமிழகம் முன்னோடியாக உள்ளது. 2001ல், மாநிலத்தில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை, 1.13 சதவீதமாக இருந்தது. தற்போது, இது, 0.25 சதவீதமாக குறைந்துள்ளது. உணவு பாதுகாப்பை பொறுத்தவரை, ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டக் கூடிய தொழில், வர்த்தக நிறுவனங்கள், உணவு பாதுகாப்பு துறையின் உரிமத்தை பெற வேண்டும். அதற்கு குறைவாக வருவாய் ஈட்டுவோர், பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.