கள்ளக்குறிச்சி:நிலத்தகராறு தொடர்பாக 39 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தை சேர்ந்தவர் வேலு, 42. இவருக்கு தென்கீரனூரில் விவசாய நிலம் உள்ளது. இவரது நிலத்திற்கு அருகில் அதே பகுதியை சேர்ந்த சீனுவாசன் மகன் ஜெயப்பிரகாஷ் என்பவரது நிலம் உள்ளது.இருவருக்குமிடையே இடம் சம்பந்தமான முன்விரோத தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் ஜெயப்பிரகாஷ் தரப்பினர் நேற்று மாலை வேலுவின் வயலில் இருந்த பிவிசி பைப் மற்றும் கம்பிகளை உடைத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் ஜெயப்பிரகாஷ் தரப்பை சேர்ந்த வாசு, முரளி, சீனு, கொளஞ்சி மற்றும் அடையாளம் தெரியாத 10 பேர் சேர்ந்து வேலுவை தாக்கினர்.இது குறித்து ஜெயப்பிரகாஷ் தரப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக வேலு புகார் அளித்தார்.அதேபோல் வேலு, செல்வநாயகம், கர்ணன், மணி மற்றும் அடையாளம் தெரியாத 20 பேருடன் சேர்ந்துகொண்டு தாக்கியதாக வாசு என்பவர் புகார் அளித்தார்.கள்ளக்குறிச்சி போலீசார் இருதரப்பை சேர்ந்த 39 பேர் மீது வழக்கு பதிந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.