சென்னை: மனைவிக்கு பொருத்துவதற்காக, கணவனின் சிறுநீரகத்தை எடுப்பதற்கு, தனியார் மருத்துவமனையின் ஆட்சேபனை கடிதத்தை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. உத்தரபிரதேச மாநிலம், பெரோசாபாத் நகரைச் சேர்ந்தவர், ரவி பிரகாஷ் அகர்வால். இவரது மனைவி, ரேகா அகர்வாலுக்கு, சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. கோவையில் உள்ள, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என, டாக்டர்கள் ஆலோசனை கூறினர். மனைவிக்காக, சிறுநீரகம் கொடுக்க, கணவன் முன் வந்தார். உத்தரபிரதேச அரசிடம் இருந்து, என்.ஓ.சி., பெற்று, கோவை மருத்துவ மனையில் சமர்ப்பித்தனர். சிறுநீரகம் அளிப்பது நெருங்கிய உறவினராக இருந்தாலும், தமிழக அரசு நியமித்துள்ள அனுமதி குழுவின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால், விண்ணப்பத்தை, அரசுக்கு அனுப்புவதாக, கோவை மருத்துவமனை தெரிவித்தது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், ரேகா அகர்வால், மனு தாக்கல் செய்தார். கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் உத்தரவை ரத்து செய்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும்படி, மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிடக் கோரி, ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: மனித உறுப்புகளை, வர்த்தக ரீதியில் அணுகுவதை தடுப்பதற்காக, 1994ம் ஆண்டு, பார்லிமென்ட்டில், சட்டம் இயற்றப்பட்டது. நெருங்கிய உறவினர் அல்லாதவர்களைப் பொறுத்தவரை, இந்தச் சட்டம், கடுமையானது தான்; ஆனால், நெருங்கிய உறவினர்களைப் பொறுத்தவரை, அவ்வளவு கடுமையானதாக இல்லை. நெருங்கிய உறவினர்கள் என, கணவன், மனைவி, மகன், மகள், தந்தை, தாயார், சகோதரர், சகோதரி, தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி, ஆகியோர் வருகின்றனர். மனுதாரர், உ.பி.,யைச் சேர்ந்தவர். சிகிச்சைக்காக, கோவை மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். உ.பி., அரசிடம், கணவன் - மனைவி விண்ணப்பித்து, அங்குள்ள கமிட்டியிடம் இருந்து, என்.ஓ.சி., பெற்றுள்ளனர். உ.பி., அரசின், அங்கீகார குழு அளித்துள்ள, என்.ஓ.சி.,யை கருத்தில் கொண்டு, மருத்துவமனையில் உள்ள குழுவானது, முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என, மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. கோவை மெடிக்கல் சென்டரின் உத்தரவு, சட்டத்துக்கு முரணாக உள்ளது. அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனவே, திருமண சான்றிதழ், குழந்தைகள் பெற்றதற்கான சான்றிதழ், உ.பி., அரசு அளித்த, என்.ஓ.சி., ஆகியவற்றை, கோவை மெடிக்கல் சென்டரில் உள்ள அங்கீகார குழுவிடம், தாக்கல் செய்ய வேண்டும். அதை குழு பரிசீலித்து, சிறுநீகர மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள, அனுமதியளிக்க வேண்டும். ஒரு வாரத்துக்குள், இந்த விஷயத்தில், கோவை மருத்துவமனை, முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.