சென்னை: பணிமூப்பு அடிப்படையில், பதவி உயர்வு அளிக்காததை கண்டித்து, பொது சுகாதாரத்துறை, சுகாதார ஆய்வாளர்கள், பணி புறக்கணிப்பு போராட்டம் அறிவித்துள்ளனர். பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் சார்பில், சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில், பல்வேறு மாவட்டகளைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து, சங்கத்தின் மாநில பொதுச் செயலர் செந்தில்குமார் கூறியதாவது: கடந்த, 1976ம் ஆண்டு முதல், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தில், 2000க்கும் மேற்பட்டோர், தொழுநோய் ஆய்வாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இவர்கள், 1997ல் பொது சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு, சுகாதார ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டனர். வட்டார சுகாதார கண்காணிப்பாளர் பதவி உயர்வில், பணிமூப்பு அடிப்படையில், இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆனால், 1989ம் ஆண்டு மற்றும் அதற்கு பின், சுகாதார ஆய்வாளர்களாக நேரடி நியமனம் பெற்றவர்களுக்கு, பதவி உயர்வு தரப்பட்டு வருகிறது. இதுதொடர்பான, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், வரும் 3ம் தேதி முதல், வட்டார சுகாதார கண்காணிப்பாளர் பதவிக்கான கலந்தாய்வு நடக்கிறது. பணிமூப்பு முறையை பின்பற்றாமல் நடத்தப்பட உள்ள, இக்கலந்தாய்வை கைவிட வலியுறுத்தி, "டெங்கு' ஒழிப்பு உள்ளிட்ட, களப்பணிகளை புறக்கணிக்கும் போராட்டத்தை சுகாதார ஆய்வாளர்கள் நடத்த உள்ளனர். இவ்வாறு செந்தில்குமார் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.