E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
"தோட்டக்கலை துறை காலி பணியிடம் வேளாண் துறை நிரப்ப முடியாது'
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 டிச
2012
00:48

சென்னை: "தோட்டக் கலை துறையில் ஏற்படும் காலியிடங்களை, வேளாண்மைத் துறை இயக்குனர், நிரப்ப முடியாது' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரசின், "சந்தைப்படுத்தலுக்கான உற்பத்தி' என்ற கொள்கைப்படி, விவசாயம், தோட்டக்கலை, பயிர் வளர்ப்பு, வேளாண் மார்க்கெட்டிங் துறைகளில், மாற்றம் கொண்டு வரப்பட்டது. தோட்டக் கலைத் துறையில், உதவி இயக்குனர் பணியிடங்கள், 43ல் இருந்து, 396 ஆக உயர்ந்தது. அனைத்து துறைகளிலும் சேர்த்து, மொத்தத்தில், 509 உதவி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதில், தோட்டக் கலை துறையில், 325 உதவி இயக்குனர் பணியிடங்களுக்கு, வேளாண் துறையில் இருந்து, 2007ல் நியமிக்கப்பட்டனர். ஐந்து ஆண்டு முடிந்த பின், தோட்டக் கலைத் துறையிலேயே இருந்து கொள்ளலாம் அல்லது மீண்டும் வேளாண் துறைக்கு வந்து விடலாம் என, நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு, ஜனவரியில், வேளாண் துறையில் இருந்து, 178 உதவி இயக்குனர்களை, தோட்டக் கலை துறையில் நியமிக்க, வேளாண் இயக்குனரகம் முடிவெடுத்தது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களில், "தோட்டக் கலை துறையில், உதவி இயக்குனர்களை நியமனம் செய்யும் அதிகாரம், தோட்டக் கலை இயக்குனருக்கு தான் உள்ளது; வேளாண் இயக்குனருக்கு இல்லை. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. மனுக்களை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: தோட்டக் கலை துறையில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப, தோட்டக் கலை இயக்குனருக்கு தான், அதிகாரம் உள்ளது. அரசாணையில் கூட, வேளாண் இயக்குனருக்கு அதிகாரம் இருப்பதாக கூறப்படவில்லை. ஐந்து ஆண்டு காலம் முடிந்த பின்பும் கூட, பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெறுதல் மூலம் ஏற்படும் காலியிடங்களை, தோட்டக் கலை இயக்குனர் தான் நிரப்ப வேண்டும். வேளாண் துறை, தோட்டக் கலை துறையில் உள்ள பணிகளுக்கான, கல்வித் தகுதி வெவ்வேறானவை. தகுதியில்லாதவர்களை கொண்டு வருவதற்காக, தோட்டக் கலைத் துறையில் நியமிக்க முடியாது. ஐந்து ஆண்டுக்கு என, தோட்டக் கலைத் துறைக்கு மாற்றப்பட்டவர்கள், அந்தக் காலம் முடிந்த பின், அதே துறையில் நீடிப்பதோ அல்லது வேளாண் துறைக்கு வருவதோ, ஒரு மாதத்துக்குள் இருக்க வேண்டும். எனவே, தோட்டக் கலை துறையில், வேளாண் துறையில் இருந்து உதவி இயக்குனர்களை கொண்டு வந்து நியமிக்கக் கூடாது; அத்தகைய நடைமுறையானது சட்டவிரோதமானது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுஉள்ளார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.