கோவை: தமிழகம் முழுவதும், மின் வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள, சிறு குறுந்தொழில் நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள், ஓட்டல்கள், தொழில் அமைப்பினர், ஜனவரி 9ம் தேதி, மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்த, முடிவு செய்துள்ளனர்.
மின் வெட்டு கிரைண்டர், மோட்டார், பம்புசெட், இன்ஜி., உதிரிபாகங்கள், நூல் ஆடை தயாரிப்பில், முக்கிய பங்கு வகிக்கும் கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மின்வெட்டு பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், கோவைக்கு கிடைத்து வந்த பல ஆர்டர்கள், பிற மாநிலங்களுக்கு கைமாறி கொண்டிருக்கின்றன. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், முதல் கட்டமாக, ஜனவரி முதல் வாரத்தில், மாநிலம் முழுவதும், தொழில் அமைப்பினர், வர்த்தக நிறுவனத்தினர், காலவரையற்ற, வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து, ஜனவரி மூன்றாம் வாரத்தில், உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள, 141 தொழில் அமைப்புகள் சார்பில், நடந்த ஆலோசனை கூட்டத்தில், 27 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் கமிட்டி, இந்த முடிவை எடுத்துள்ளது. கோவையை சேர்ந்த, தொழில் வர்த்தக சங்கம், சீமா, சிஸ்பா, பீட்டா, டாக்ட், கவுமா, சீயா, டாப்மா உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள், ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
அரசு மறுப்பு"காட்மா' சங்கத் தலைவர் ரவிகுமார் கூறியதாவது: மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண, பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு கண்டு கொள்ள மறுத்து விட்டது. சென்னையை தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களுக்கு மின்வெட்டு நேரத்தை அதிகரித்து, பாரபட்சம் காண்பிப்பதை ஏற்க முடியாது. மின் பற்றாக்குறை தீரும் வரை, இருக்கும் மின்சாரத்தை, அனைத்து மாவட்டங்களுக்கும் சரிசமமாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இதை வலியுறுத்தி, ஜன., 9ம் தேதி, வேலை நிறுத்தம் நடத்தவுள்ளோம். இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், மின்வெட்டு பிரச்னைக்கு, தற்காலிக தீர்வு கிடைக்கும். இது தெரிந்தும், அரசு மவுனம் சாதிப்பது ஏன் என, புரியவில்லை.
தந்தி அனுப்ப முடிவுவேலை நிறுத்தத்தில், தமிழகம் முழுவதும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள தொழிற்சங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் பங்கேற்கின்றன. முன்னதாக, இதே கோரிக்கையை வலியுறுத்தி, வரும், 28ம் தேதிமுதல், 31ம் தேதி வரை, தமிழக முதல்வர், ஐகோர்ட் தலைமை நீதிபதி, மின்வாரிய தலைவர் ஆகியோரின் கவனத்தை ஈர்க்க, தமிழகம் முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான தொழில் முனைவோர் சார்பில், தந்தி அனுப்பப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.