DISTRICT NEWS | தே.மு.தி.க., கவுன்சிலர்கள் மீது காணை சேர்மன் போலீசில் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க., கவுன்சிலர்கள் மீது காணை சேர்மன் போலீசில் புகார்

Added : டிச 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

விழுப்புரம்:பதவிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்டிய தே.மு.தி.க., கவுன்சிலர்கள் மீது காணை ஒன்றிய சேர்மன் போலீசில் புகார் அளித்துள்ளார்.காணை ஒன்றிய இளங்கோவன் தலைமையில் கவுன்சிலர்கள் வெற்றிவேல், அமராவதி அன்பழகன், முத்தமிழ்செல்வன் ஆகியோர் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மாலை அளித்துள்ள புகார் மனு:நான்(காணை சேர்மன் இளங்கோவன்) பெரும்பாக்கத்தில் வசித்து வருகிறேன். காணை ஒன்றிய அ.தி.மு.க., செயலாளராக கடந்த பத்து ஆண்டுகளாக பணிபுரிவதுடன், கடந்த உள்ளாட்சி தேர்தலில் காணை ஒன்றியக்குழு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
காணை ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேம்பாட்டு திட்டம், மக்களுக்கு தேவையான பணிகளை செய்து வந்த நிலையில் கடந்த நவ., 2ம் தேதி காணை ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த தீர்மானங்களை நிறைவேற்றாமல் இருக்க தே.மு.தி.க., கவுன்சிலர்கள் பச்சமுத்து, குமார் ஆகியோர் சென்னை உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து, அதன் பேரில் ஐகோர்ட் மூலம் நோட்டீஸ் எனக்கு கிடைத்தது.இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இதற்கிடையே ஐகோர்டில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது என பொய்யான தகவலை காணை ஒன்றிய தே.மு. தி.க., சார்பில் போஸ்டர்கள் மூலம் ஒட்டியுள்ளனர்.

இது என் பெயருக்கும், நான் சார்ந்துள்ள கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.வழக்கு நிலுவையில் உள்ள போது பொய்யான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி வரும் தே.மு.தி.க., கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சேர்மன் இளங்கோவன் மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை